For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேள்வித்தாள் லீக் விவகாரம்: மறுதேர்வு இல்லை என சிபிஎஸ்இ அறிவிப்பு

கேள்வித்தாள் லீக்கான விவகாரத்தில் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மறுதேர்வு இல்லை என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: 10-ஆம் வகுப்பு கணித தேர்வின் போது கேள்வித்தாள் லீக்கான விவகாரத்தில் டெல்லி, ஹரியானா மாணவர்களுக்கு மறுதேர்வு இல்லை என்று சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் மார்ச் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஒருசில பாடங்களுக்கான வினாத்தாள்கள் இணையதளங்களில் வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்தது.

There will be no reexam conduct for CBSE 10 th standard

தலைநகர் டெல்லியில் வாட்ஸ்அப் மூலம் கேள்வித்தாள் பரவியதாகவும் கூறப்பட்டது. 12-ம் வகுப்பு பொருளாதார தேர்வு மற்றும் 10-ம் வகுப்பு கணித தேர்வு பாட வினாத்தாளும் வட மாநிலங்களில் வெளியானது.

குறிப்பாக ஹரியானா மற்றும் டெல்லியில் இதுபோன்று கணித தேர்வுக்கான வினாத்தாள் லீக்கானது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் 10 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதத்துக்கான மறுதேர்வு மீண்டும் நடத்தப்படாது என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதை மனித வள மேம்பாட்டுத் துறை செயலாளர் அனில் ஸ்வரூப் உறுதிப்படுத்தினார்.

English summary
There will be no reexam conduct for CBSE class 10 students for Delhi, Haryana who face question paper leakage issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X