For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கணவன் மனைவி உறவில் 3வது நபர் கட்டப்பஞ்சாயத்து செய்வது சட்டவிரோதம்: சுப்ரீம்கோர்ட் அதிரடி

கணவன் மனைவி உறவில் மூன்றாவது நபர் கட்டப்பஞ்சாயத்து செய்வது சட்டவிரோதம் என சுப்ரீம்கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கணவன் மனைவி உறவில் 3வது நபர் கட்டப்பஞ்சாயத்து செய்வது சட்டவிரோதம்- வீடியோ

    டெல்லி: கணவன் மனைவி உறவில் மூன்றாவது நபர் கட்டப்பஞ்சாயத்து செய்வது சட்டவிரோதம் என சுப்ரீம்கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

    கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனையில் மூன்றாவது நபர் தலையீட்டு கட்டப்பஞ்சாயத்து செய்வது வடமாநிலங்களில் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சக்தி வாஹினி என்ற என்.ஜி.ஓ. அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

    அதில் கட்டப்பஞ்சாயத்துகளால்தான் ஆணவக் கொலைகள் அதிகம் நடப்பதாகவும் அந்த தொண்டு நிறுவனம் தனது மனுவில் தெரிவித்திருந்தது. இந்த மனு மீதான விசாரணை ஏற்கனவே நிறைவடைந்து விட்டது.

    சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு

    சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு

    இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர் மற்றும் டி.ஒய். சந்திரசூட் ஆகிய 3 பேர் கொண்ட நீதிபதி அமர்வு இந்த மனு மீது இன்று தீர்ப்பு வழங்கினர்.

    சட்டவிரோதம்

    சட்டவிரோதம்

    இதில், இரு மனமொத்த தம்பதியின் திருமணத்திற்கு எதிரான எந்தவொரு சட்டவிரோத முறையில் கட்டப்பஞ்சாயத்துகள் நடத்துவதற்கு அனுமதி இல்லை என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

    மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்

    மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்

    கட்டப்பஞ்சாயத்துகளை தடுக்கும் வகையில் மாநில அரசுகள் சட்டவிதிகளை உருவாக்க வேண்டும் என்றும் சுப்ரீம்கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

    மனு தள்ளுபடி

    மனு தள்ளுபடி

    மேலும் அரசு சட்டவிதிகளை உருவாக்கும் வரை இதுபோன்ற கட்டப்பஞ்சாயத்து நடத்துவதற்கு தண்டனை விதிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.கட்டப்பஞ்சாயத்துக்கு எதிராக சக்தி வாஹினி அமைப்பு தொடர்ந்த மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    English summary
    The Supreme Court has issued a verdict that the third person doing Panchayat in the relationship of husband and wife is illegal.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X