For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குறை மாதத்தில் பிறந்த குழந்தை உயிரை காப்பாற்ற ரூ.19 லட்சம் தேவை! உதவுங்களேன் ப்ளீஸ்

குறை மாதத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்ற உங்களால் முடிந்த நன்கொடையை அளித்து உதவ அந்த குழந்தையின் தந்தை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

சென்னை: உயிருக்கு போராடும் குழந்தைக்கு உங்கள் நிதி உதவி தேவைப்படுகிறது.

எங்கள் ஆண் குழந்தை ஒருபோதும் அவரது வேதனையை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது, அழுவதே அவர் சுவாசிப்பதற்கு போராடுகிறார் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த அவரது ஒரே வழி. NICU பிரிவில் அவர் உயிருக்கு போராடுவதை பார்க்க ஒரு மணிநேரம் எனக்கு கிடைத்தது. அவனது வளர்ச்சியடையாத உடலும் என்னை மிகவும் பயமுறுத்துகிறது. அவர் 700 கிராம் எடையுடன் பிறந்தார், அவரது எடை 4 மாதங்களாக NICUல் வைத்த பிறகும், 1.5 கிலோவாகத்தான் உள்ளது. அவருக்கு 2.5 கிலோ எடை தேவை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

This Delivery Boy Needs A Staggering Rs. 19 Lakhs To Save His Premature Baby

2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி, என் குடும்பம் புத்தாண்டு கொண்டாட திட்டமிட்டிருந்தது. இருப்பினும், என் கர்ப்பிணி மனைவி உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இரு உயிரையும் காப்பாற்ற ஒரே வழி சி-பிரிவு அறுவை சிகிச்சை என்று மருத்துவர்கள் சொன்னார்கள்.

நாங்கள் டிசம்பர் 31, டிசம்பர் 31 அன்று ஆண் குழந்தையுடன் ஆசீர்வதிக்கப்பட்டோம், அது என் வாழ்க்கையின் சந்தோஷமான நாள். இருப்பினும், அவர் முன்கூட்டியே பிறந்ததால் அவரது இதயம், நுரையீரல் மற்றும் மூளை வளர்ச்சியடையாமல் இருந்தது. மேலும், அவர் சுவாச பிரச்சினையாலும் பாதிக்கப்பட்டார்.

எங்களுக்கு அவரது வாழ்வை காப்பாற்ற 19 லட்ச ரூபாய் தேவை. ஆனால் இந்த அளவு பணத்தை பெற முடியுமா என்பதில், எங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. இந்த வாழ்க்கை காப்பாற்றும் தொகையை நாங்கள் எவ்வாறு பெறுவோம் என்பதை எங்களுக்குத் தெரியாது. நன்கொடை வடிவில் உங்கள் உதவியுடன், இந்த சிறுவன் தனது நோயைத் தோற்கடித்து விரைவில் வீட்டிற்கு செல்ல முடியும்.

என் பெயர் விஜய் எஸ்.எஸ். டெலிவரி பாய் வேலை பார்க்கும் நான், மாதம் ரூ.16,000 சம்பளத்தில் 6 பேர் கொண்ட குடும்பத்தை பராமரித்து வருகிறேன். நாங்கள் எதிர்கொண்டிருக்கும் மருத்துவ கட்டணம் பற்றிய சுமையை உணர்ந்ததில் இருந்து, என் 63 வயதான தந்தை எங்களை ஆதரிப்பதற்காக பெயிண்டர் வேலை செய்து வருகிறார். ஒரு நாளைக்கு NICU செலவு ரூ. 22,000 மாக இருக்கிறது. நான் என் நண்பர்களிடமிருந்து சிகிச்சைக்காக 5 லட்சம் கடன் பெற்றுள்ளேன்.

இப்போது நாம் எல்லா பணத்தையும் சிகிச்சை செலவுக்காக, செலவிட்டுவிட்டோம். இது என் முதல் குழந்தை. நான் ஒரு தகப்பனாக உடந்தைபோய்விட்டேன். , நான் அவரது செலவினங்களை நிர்வகிக்க முடியாமல் திணறுகிறேன். எங்கள் மகனின் நிலையை விரைவில் மாற்ற விரும்புகிறோம்.

நான் என் மகனை சந்திக்க 1 மணி நேரம் கிடைக்கும். அவர் மிகவும் அழகாக இருப்பார், அவர் என்னைப் போலவே இருப்பதாக உணர்கிறேன். இருப்பினும், என் குடும்பத்தினர் அவர், தனது அம்மாவைப் போல் இருப்பதாக கூறுகின்றனர். அவரின் உடல் முழுவதும் வயர்கள் மற்றும் குழாய்கள் மூலம் சூழப்பட்டுள்ளார். அவை அவரை காப்பாற்ற உதவுகிறது என்றாலும் கூட, இதை பார்த்து பயப்படுகிறேன். என் மனைவி அறுவை சிகிச்சைக்கு உட்பட்டவர் என்றபோதிலும், தினமும் மருத்துவமனைக்கு பயணித்து குழந்தைக்கு தாய்ப் பால் கொடுத்து வருகிறார். இவரை இழந்துவிட்டால் எங்கள் குடும்பம் உடைபடும்.

இந்த தந்தை தனது மகனின் சிகிச்சையை ஆதரிக்க போராடி வருகிறார். நீங்கள் அவரது நிதியளிப்பாளருக்கு தாராளமாக நன்கொடை அளிப்பதன் மூலம் அவருக்கு உதவ முடியும்.

எங்கள் மகன் மீண்டும் வந்தாலும் கூட, அவரை ஒரு வருடத்திற்கும் மேலாக இன்பெக்ஷன் ஏற்படாமல் கவனமாக கவனித்துக்கொள்வது அவசியம். அவர் வலுவாக வளர வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஆனால் அவரது முன்னேற்றம் மெதுவாக உள்ளது. நான் அவரது மருத்துவ கட்டணங்களை செலுத்த முடியவில்லை. ஒரு வாய்ப்பு கிடைத்தால், எனது மகனை ஒரு மருத்துவராக உருவாக்கி, நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கவும் விரும்புகிறேன். நான் இந்த பிரச்சனையை அனுபவித்து கொண்டிருக்கிறேன், யாரும் அப்படி பிரச்சினையை அனுபவிக்க கூடாது என நினைக்கிறேன்.

கேட்டோ மூலம் நன்கொடை அளிப்பதன் மூலம் விஜய்க்கு நீங்கள் உதவ முடியும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X