For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு முன்பே சபரிமலை கோயிலுக்கு சென்ற முதல் பெண் இவர்தான்...

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: உச்சநீதின்றத் தீர்ப்புக்கு முன்பே சபரிமலை கோயிலுக்கு முதல்முறையாக சென்ற பெண் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாகும்.

இந்த தடையை நீக்கக் கோரி பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதை சேர்ந்த பெண்களும் நுழையலாம் என அதிரடி தீர்ப்பை அளித்தனர்.

சபரிமலை

சபரிமலை

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு முன்னரே தனது 41 வயதில் சபரிமலைக்கு சென்றுள்ளதாக பெண் ஆட்சியர் ஒருவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இவரது பெயர் கே பி வல்சலா குமாரி.

[ நீதியை கொல்கிறான், மவுனமாய் போகிறோம்.. நறுக் தெறிக்கும் சர்கார் பாடல்.. எச்.ராஜா என்ன செய்வார்? ]

நீதிமன்ற உத்தரவை பெற்று

நீதிமன்ற உத்தரவை பெற்று

இவர் கடந்த 1994-95-ஆம் ஆண்டில் பத்தனம்திட்டாவின் ஆட்சியராக இருந்தார். அப்போது சபரிமலை கோயிலுக்கு பக்தர்களின் அதிகப்படியான வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிடுவதற்காக வல்சலா குமாரி கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவை பெற்று சபரிமலைக்கு 4 முறை சென்று வந்துள்ளார்.

18 படிகளில் ஏறி

18 படிகளில் ஏறி

பக்தையாக செல்லாமல் பணி நிமித்தமாகவே சென்றுள்ளார். எனினும் பதினெட்டு படிகளில் ஏறுவதற்கு அவருக்கு நீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது. இதனால் படிகளுக்கு கீழ் இருகைகளையும் கட்டிக் கொண்டு ஐயப்பனை வழிப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் 50 வயது நிறைவடைந்தவுடன் சபரிமலைக்கு சென்று 18 படிகளில் ஏறி ஐயப்பனை தரிசித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

பக்தர்களுக்கு குடிநீர்

பக்தர்களுக்கு குடிநீர்

மேலும் அனைத்து வயதினரும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவர் வரவேற்றுள்ளார். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலான கழிப்பறைகளை தேவசம் போர்டு அறிமுகப்படுத்த வேண்டும். பம்பா நதியை சுத்தப்படுத்தி சுகாதாரமான குடிநீரை பக்தர்களுக்கு வழங்க வேண்டும் என முன்னாள் ஆட்சியர் வல்சலா குமாரி கோரிக்கை விடுத்துள்ளார்.

English summary
Over two decades before the Supreme Court allowed entry of women of all ages at Sabarimala, a woman IAS officer visited the shrine as part of her official duty, armed with a special order from the high court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X