For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த குமாரசாமி

கர்நாடகாவில் மஜத- காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் எந்த பிளவும் இல்லை, எல்லாம் சரியாக சென்று கொண்டுள்ளது என்று மஜத கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த குமாரசாமி-வீடியோ

    பெங்களூர்: கர்நாடகாவில் மஜத- காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் எந்த பிளவும் இல்லை, எல்லாம் சரியாக சென்று கொண்டுள்ளது என்று மஜத கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

    கர்நாடகாவில் 104 இடங்களில் வெற்றி பெற்று 7 எம்எல்ஏக்கள் பலம் இல்லாததால் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலே பதவி விலக்கிக் கொண்டது. இதனால் தற்போது மஜத தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது.

    This is all bogus & fake news, There is no problem in alliance with Congress: Kumaraswamy

    இதனால் கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மஜத கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி. அவர் நாளை மறுநாள் முதல்வராக பதவியேற்க உள்ளார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கும் மஜத கட்சிக்கு இடையில் இருந்த கூட்டணியில் பிளவு ஏற்பட்டதாக செய்தி வெளியானது. அமைச்சரவை உருவாக்குவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. யாருக்கு அமைச்சரவையில் இடமளிப்பது என்று குழப்பம் ஏற்பட்டதாக செய்தி வெளியானது.

    அதேபோல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர், டிகே சிவக்குமார், மஜத கட்சியிடம் நிறைய அமைச்சர் பதவி கேட்டதாகவும், மஜத அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் கூறி இருந்தனர். இது கர்நாடக அரசியலில் ஓய்ந்து இருந்த புயலை மீண்டும் கிளப்பியது.

    தற்போது இந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் குமாரசாமி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கூட்டணியில் பிளவு என்று வந்த செய்தி எல்லாம் பொய் என்றுள்ளார். இதுகுறித்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

    யார் சொன்னது, எங்கள் கூட்டணியில் எந்த பிளவும் இல்லை. எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. கூட்டணியில் பிளவு என்று வந்த செய்தி எல்லாம் முழுக்க முழுக்க பொய். எதையும் நம்பி தொண்டர்கள் குழம்ப வேண்டாம்.

    நாங்களும் காங்கிரஸ் கட்சியும் ஒற்றுமையாக இருக்கிறோம். பெங்களூர் மாநகராட்சி பதவியில் கூட இரண்டு கட்சிகளும் கூட்டணி வைத்துள்ளோம். மூன்று வருடமாக எங்கள் கூட்டணி உடையாமல் உள்ளது. சட்டமன்ற கூட்டணியும் அப்படித்தான். எல்லோரும் அமைச்சராக முடியாது. எங்கள் உறுப்பினர்கள் சில விஷயங்களை சகித்துக் கொள்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Who told you? This is all bogus & fake news. This is not true: Karnataka CM designate Kumaraswamy on reports of resentment within Congress over alliance with JD(S)
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X