For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சமூக வலைதளத்தில் தீயாக பரவிய இளம் ஐஏஎஸ் அதிகாரியின் போட்டோ: ஏன் தெரியுமா?

By Siva
Google Oneindia Tamil News

ராய்பூர்: சத்தீஸ்கரில் இளம் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் குழந்தையின் கட்டில் மீது ஒரு காலை தூக்கி வைத்து நின்றபோது எடுக்கப்பட்ட

புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ரமனுஜ்கஞ்ச்சில் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வருபவர் ஐஏஎஸ் அதிகாரியான டாக்டர் ஜக்தீஷ் சோன்கர். அவர் ஊட்டச்சத்து குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை பார்க்க சென்றார்.

மருத்துவமனையில் அவர் ஒரு குழந்தையின் கட்டில் மீது ஒரு காலை தூக்கி வைத்து அதன் தாயுடன் பேசுகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.

விமர்சனம்

விமர்சனம்

ஜக்தீஷ் ஷூக்காலை கட்டிலில் வைத்திருப்பதை பார்த்த பலரும் அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்நிலையில் நான் வேண்டும் என்றே செய்யவில்லை, காலை கட்டிலில் வைப்பதை தவிர்க்க முடியவில்லை என ஜக்தீஷ் தெரிவித்துள்ளார்.

திமிர்

ஐஏஎஸ் அதிகாரி ஜக்தீஷ் சோன்காருக்கு என்ன திமிர்- இது போன்றவர்களுக்கு சாதாரண மக்கள் மதிப்பளிக்க வேண்டுமா என ஒருவர் ட்வீட்டியுள்ளார்.

மரியாதை

டியர் ஜக்தீஷ் சோன்கர், ஐஏஎஸ் 2013ம் ஆண்டு பேட்ச், சத்திஸ்கரில் எஸ்டிஎம்: மரியாதையாக நடந்து கொள்ளுங்கள். மீண்டும் இது போன்று நடந்து கொள்ளாதீர்கள் என பாரதி சதுர்வேதி தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சி

சத்தீஸ்கரில் எஸ்டிஎம் ஆக பணியாற்றும் ஜக்தீஷ் சோன்கர் மருத்துவமனைக்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஐஏஎஸ் அசோசியேஷன் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

English summary
Picture of a young IAS officer in Chattisgarh has gone viral on social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X