For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஊரே பற்றி எரியும்போதும், ஒரு பள்ளிக்கு மட்டும் பாதிப்பு இல்லை.. காஷ்மீர் பிரிவினைவாதிகளின் பாசம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள பள்ளிகள் அனைத்தும் பிரிவினைவாத போராட்டங்களால் மூடப்பட்டிருந்தாலும், பிரிவினைவாதி கிலானியின் பேத்தி படிக்கும் பள்ளி மட்டும் மூடப்படவில்லையாம். போராளிகளின் குடும்ப விசுவாசத்தை இது காட்டுவதாக கூறுகிறார்கள் காஷ்மீர் விவகாரம் அறிந்தவர்கள்.

கிலானியின் மூத்த மகன், நயீம் ஜாபர் மகள் ஸ்ரீநகரிலுள்ள டிபிஎஸ் பள்ளியில் 9வது வகுப்பு படிக்கிறார். கடந்த 1ம் தேதி முதல் 5ம் தேதிவரை இப்பள்ளியில் தேர்வுகள் பிரச்சினையின்றி நடைபெற்றன. கிலானியின் பேத்தி உட்பட அப்பள்ளியின் 572 மாணாக்கர்கள் தேர்வை எழுதி முடித்துள்ளனர்.

This school in J&K remains open because Geelani's grand-daughter studies here

அதேநேரம், மாநிலத்தின் பிற பகுதிகளில் பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் மீது தீ வைப்பு சம்பவங்கள் ஆங்காங்கு நடைபெற்ற வண்ணம் உள்ளன. கல்வி அமைச்சர் பள்ளிகளை திறந்த சொன்னாலும்கூட, பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

பள்ளிகளை குறி வைத்து எரிக்கும் தீவிரவாதிகள்.. 90களின் பயங்கர காலம் திரும்புகிறதா காஷ்மீரில்?]பள்ளிகளை குறி வைத்து எரிக்கும் தீவிரவாதிகள்.. 90களின் பயங்கர காலம் திரும்புகிறதா காஷ்மீரில்?]

ஆனால், கிலானி பேத்தி படிக்கும் பள்ளிக்கூடத்திற்கு போராட்டக்காரர்கள் எந்த தீங்கும் செய்யவில்லை. பிற குழந்தைகள் கல்வி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கிலானி பேத்திக்கு படிப்பில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் போராட்டக்காரர்கள் பார்த்துக்கொள்கிறார்கள்.

English summary
All schools shut, 23 of them burnt or targeted, but there is one school that operates normally in Jammu and Kashmir. This only because the grand daughter of Separatist leader S A R Geelani studies in it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X