For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

“கழுதையைக் குதிரையாக்க முடியாது” – விஎச்பி தலைவரின் பேச்சால் புது சர்ச்சை!

Google Oneindia Tamil News

கான்பூர்: உத்தர பிரதேச மாநில விஸ்வ இந்து பரிஷத் தலைவர் உமா சங்கர் ஷர்மா, இஸ்லாமியர்கள் குறித்துப் பேசியுள்ள பேச்சால் புது சர்ச்சை வெடித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநில விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மாநிலத் தலைவர் உமா சங்கர் ஷர்மா. கான்பூரில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மற்ற மதத்தினரை தரக்குறைவாக பேசியதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

Those converted to islam are like donkeys – vhp

அவ்விழாவில் பேசிய உமா சங்கர் ஷர்மா,"யாரெல்லாம் இஸ்லாம் மதத்திற்கு மாறுகின்றனரோ அவர்களெல்லாம் கழுதைகளுக்குச் சமம். அவர்களை மீண்டும் இந்து மதத்திற்குக் கூட்டி வருவதன் மூலம், ஒரு கழுதையினை எவ்வளவுதான் பயிற்சி அளித்தாலும் அதனைக் குதிரையாக மாற்ற இயலாது" என்று அவர் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

நாட்டின் பல இடங்களிலும் பிற மதத்தவரை இந்து மதத்திற்கு மாறும் நிகழ்ச்ச்சிகளை விஎச்பி நடத்தி வருகிறது. குஜராத்தில் விஸ்வ இந்து பரிஷத் நடத்திய நிகழ்ச்சியில் 225 கிறிஸ்தவர்கள் இந்து மதத்திற்கு மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உ.பி. விஎச்பி தலைவர் பேசியுள்ள பேச்சு புது பிரச்சினையைக் கிளப்பியுள்ளது.

English summary
State President of VHP, Uma Shankar Sharma speaking at a function in Kanpur called those who had converted to Islam as donkeys. He mocked them saying no matter how much you train a donkey it can never become a horse
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X