For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேலை செய்ய விரும்பாதவர்களே அரசு வேலையை தேர்வு செய்கிறார்கள்: ராஜஸ்தான் முதல்வர்

By Siva
Google Oneindia Tamil News

கோட்டா: வேலை பார்க்க விரும்பாதவர்கள் தான் அரசு வேலையை தேர்வு செய்வதாக ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் நகரில் உள்ள ஐடிஐ கல்வி நிறுவனத்தில் நடந்த நிகழ்சச்சியில் அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜே கலந்து கொண்டு உரையாற்றினார். மாணவர்களை படித்து சொந்தமாக தொழில் துவங்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

Those who never want to work opt for govt jobs, quips Vasundhara Raje

அப்போது அவர் கூறுகையில்,

உலகிலேயே இந்தியாவில் தான் மக்களுக்கு அரசு வேலை பிடித்துள்ளது. வேலை பார்க்க விரும்பாதவர்கள் தான் அரசு வேலையை தேர்வு செய்கிறார்கள். சொந்தமாக தொழில் துவங்கினால் நீங்கள் பலருக்கு வேலை கொடுக்கலாம்.

இளைஞர்கள் சொந்தமாக தொழில் துவங்குவதில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

ராஜே தனது சொந்த தொகுதியான ஜலாவரில் ரூ.206 கோடி மதிப்பிலான 6 மேம்பாட்டு திட்டங்களுக்கான அடிகற்களை நாட்டினார். மேலும் பல புதிய திட்டங்களையும் அறிவித்துள்ளார்.

English summary
Those who never want to work opt for government jobs, Rajasthan Chief Minister Vasundhara Raje quipped in a lighter vein as she asked youths to opt for self-employment and entrepreneurship.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X