For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேபாளில் கனமழை... மானசரோவருக்கு சுற்றுலா சென்ற 1000 இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் பரிதவிப்பு

நேபாளில் கனமழை பெய்து வருவதால் இந்தியாவில் இருந்து மானசரோவர் யாத்திரை சென்ற 1000-க்கும் மேற்பட்டவர்கள் நடுவழியில் சிக்கியுள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    கனமழை, கடுங்குளிரால் நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்- வீடியோ

    காத்மாண்டு: நேபாளில் கனமழை பெய்து வருவதால் இந்தியாவில் இருந்து மானசரோவர் யாத்திரை சென்ற 1000-க்கும் மேற்பட்டவர்கள் நடுவழியில் சிக்கியுள்ளனர். இவர்களுக்கு இந்திய தூதரகம் உதவி வருகிறது. மேலும் அங்கு கடுங்குளிர் நிலவி வருகிறது.

    திபெத்தில் உள்ள கைலாஷ் மற்றும் மானசரோவருக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருவது வழக்கம். கடந்த 2015 ஆம் ஆண்டு நாதுலா கணவாய் மூலமாக மானசரோவருக்கு செல்ல சீனா அரசு அனுமதி அளித்தது. இது தவிர உத்தரகாண்ட் மூலமாகவும் இந்த இடத்தை அடையலாம்.

    மலை பாதை

    மலை பாதை

    இந்தியாவில் இருந்து மானசரோவருக்கு 1000-க்கும் மேற்பட்டோர் சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் மானசரோவரில் உள்ள சிவபெருமானை தரிசனம் செய்து விட்டு மலை பாதையில் திரும்பி கொண்டிருந்தனர்.

    1000 யாத்ரீகர்கள்

    1000 யாத்ரீகர்கள்

    அப்போது நேபாளத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அவர்களால் மேற்கொண்டு வர இயலவில்லை. இது போல் 1000-க்கும் மேற்பட்டோர் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து வெளியுறவு துறை அமைச்சகம் கூறுகையில் சிமிகாட்டில் 525 யாத்ரீகர்களும், ஹில்சாவில் 550 யாத்ரீகர்களும், திபெத்தில் 500-க்கும் மேற்பட்டோரும் சிக்கியுள்ளனர்.

    உதவிகள்

    இந்த 1000 பேரில் 290 பேர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்களாவர். உத்தரகாண்ட் வழியாக கைலாஷ் மற்றும் மானசரோவருக்கு சென்ற ஆந்திர மாநிலத்தவர்கள் பிதோராகரில் சிக்கியுள்ளனர். இவர்கள் அனைவரையும் மீட்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய தூதரகம் செய்து வருகிறது. அவர்களுக்கு தேவையான மருத்துவம், உணவு உள்ளிட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த யாத்திரையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளனர் என்று அமைச்சகம் கூறியது.

    தொலைபேசி எண்

    தொலைபேசி எண்

    நேபாளில் வானிலை மோசமான நிலையில் இருப்பதால் மழை பாதையை தவிர்த்து வேறு மாற்று வழியில் யாத்ரீகர்களை மீட்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. அவசர உதவிக்கு இந்திய தூதரகத்தை +977 985-1107006 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

    English summary
    1,000 Indian pilgrims who are undertaking the Kailash-Mansarovar pilgrimage are stranded in Nepal due to heavy rain and bad weather. The Indian embassy in Kathmandu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X