For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அஸ்ஸாம் சாலைகளில் திரண்டு கொதித்த பல்லாயிரம் மக்கள்.. ஊரடங்கு உத்தரவு.. களத்தில் ராணுவம்!

Google Oneindia Tamil News

குவஹாத்தி: குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்களால் வடகிழக்கு மாநிலங்கள் பற்றி எரிந்து வருகிறது. மக்கள் ஆவேசத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அண்டை நாடுகளில் இருந்து வந்து இந்தியாவில் குடியேறியவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கும் மசோதா திங்கள்கிழமை லோக்சபாவிலும், புதன்கிழமயான நேற்று ராஜ்யசபாவிலும் நிறைவேறியது.

இந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அண்டைநாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்களுக்கு குடியுரிமை அளித்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அச்சப்படும் அம்மக்கள் குடியுரிமை அளிக்கும் மசோதாவை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

போராட்ட களம்

போராட்ட களம்

நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை முழுஅடைப்பு போராட்டம் தொடங்கிய நிலையில் இன்னும் இயல்பு நிலை பல இடங்களில் திரும்பவில்லை.. வடகிழக்கு மாநிலங்கள் போராட்ட களமாக மாறியுள்ளது.

மக்கள் கோபம்

மக்கள் கோபம்

அஸ்ஸாம் மாநில தலைநகர் குவஹாத்தியில் நேற்று முதல் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பபட்டுள்ளது. அஸ்ஸாம் மற்றும் திரிபுரா ஆகிய இருமாநிலங்களிலும் மக்கள் மிகவும் கோபத்துடன் உணர்ச்சி பெருக்கில் போராட்த்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அங்கு பதற்றமான நிலை நீடிக்கிறது. நிலைமையை கட்டுப்படுத்த அஸ்ஸாம் மாநிலத்தில் இராணுவம் களம்இறங்கி உள்ளது. திரிபுரா மாநிலத்தில் அஸ்ஸாம் ரைபிள் படை களம் இறக்கப்பட்டுள்ளது.

காவல்துறை தகவல்

காவல்துறை தகவல்

மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவையடுத்து அஸ்ஸாமின் திப்ருகார்க்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அஸ்ஸாம் மாநிலம் லக்கினகர் பகுதியில் உள்ள முதல்வர் சர்பானந்தா சோனோவாலின் வீட்டில் கலவரக்காரர்களால் கற்கள் வீசப்பட்டதாக திப்ருகார் துணை ஆணையர் பல்லவ் கோபால் ஜா தெரிவித்தார்.

சூறையாடிய மக்கள்

சூறையாடிய மக்கள்

பாஜக எம்எல்ஏ பிரசாந்தா புகான் மற்றும் கட்சித் தலைவர் சுபாஷ் தத்தா ஆகியோரின் வீடுகளையும் குடியுரிமை திருத்த மசோதா எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் சூறையாடினர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குவஹாத்தியில்

குவஹாத்தியில்

இராணுவ மக்கள் தொடர்பு அலுவலர் (புரோ) லெப்டினன்ட் கேணல் கூறுகையில், குவஹாத்தி மாவட்டத்தில் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்., தின்சுகியா மாவட்டத்திலும் ராணுவத்தினர் கொடி அணுவகுப்பு நடத்தி வருவதாகவும் அங்கிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஸ்ஸாம் ரைபிள்

அஸ்ஸாம் ரைபிள்

திரிபுராவில் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஷில்லாங்கில் தெரிவித்தார். இராணுவ உயர்அதிகாரிகளின் கட்டளையின்படி துணை ராணுவப் படையான அசாம் ரைபிள் படை வீரர்கள் திரிபுராவில் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

அஸ்ஸாமில்

அஸ்ஸாமில்

அமைதியை நிலைநாட்டவும் மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கும் சமூக ஊடகங்களை "தவறாகப் பயன்படுத்துவதை" தடுக்கும் பொருட்டு புதன்கிழமை இரவு 7 மணி முதல் அசாமின் 10 மாவட்டங்களில் இணைய சேவைகள் முற்றிலும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன. அமைதியைக் குலைக்கும் கலவரக்காரர்களின் முயற்சிகளைத் தடுக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி முதல் திரிபுராவில் இணைய சேவைகள் ஏற்கனவே 48 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.. திரிபுரா அரசு பிறப்பித்த உத்தரபின்படி அனைத்து மொபைல் சேவைகளின் எஸ்எம்எஸ் சேவையையும் தடை செய்யப்பட்டுள்ளது.

பெரும் வன்முறை

பெரும் வன்முறை

புதன்கிழமையான நேற்று குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் அசாமின் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் பெரிய அளவில் மோதல் ஏற்பட்டது. கட்டக்கடங்காத அளவுக்கு வன்முறை, மற்றும் குழப்பம் நீடிப்பதால் ராணுவம் களம்இறங்கி உள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படை

பாதுகாப்பு படை

எந்தவொரு கட்சியும் அல்லது மாணவர் அமைப்பும் அசாமில் முழு அடைப்பு விடுக்காமலேயே, குடியுரிமை திருத்த மசேதாவுக்கு எதிராக பெரும்பாலான மாணவர்கள், அஸ்ஸாம் மாநில தலைமைசெயலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பாதுகாப்புப் படையினருடன் மோதலில் இறங்கினர். போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் தடியடி நடத்திய எதிர்ப்பாளர்களை கலைத்தனர்.

English summary
protest against the Citizenship Amendment Bill (CAB), was placed under indefinite curfew at Guwahati
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X