For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் ஹனுமந்தப்பா உடல் தகனம்

By Mathi
Google Oneindia Tamil News

தார்வாட்: சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 6 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ராணுவ வீரர் ஹனுமந்தப்பாவின் உடல் அவரது சொந்த ஊரான கர்நாடகா மாநிலம் பேட்டாதூரில் தகனம் செய்யப்பட்டது.

உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சினில் பனிச்சரிவில் மெட்ராஸ் ரெஜிமெண்ட்டின் 10 ராணுவ வீரர்கள் சிக்கினர். இவர்களில் ஹனுமந்தப்பா என்ற ராணுவ வீரர் மட்டும் 6 நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டார்.

Thousands throng Betadur village to bid farewell to Lance Naik Hanumanthappa

கோமா நிலையில் இருந்த அவருக்கு டெல்லி ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஹனுமந்தப்பா நேற்று முற்பகல் உயிரிழந்த சம்பவம் தேசத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஹனுமந்தப்பாவின் உடல் இன்று கர்நாடக மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊரான பேட்டாதூருக்கு இன்று கொண்டுவரப்படுகிறது. முன்னதாக ஹூப்பாலியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது.

அதன் பின்னர் பேட்டாதூரில் உள்ள அரசு மேல்நிலைப் பளிக்கு இன்று பிற்பகல் ஹனுமந்தப்பா உடல் கொண்டுவரப்படும். டெல்லி மருத்துவமனையில் ஹனுமந்தப்பாவை பார்க்க சென்ற அவரது குடும்பத்தினர் சிறப்பு விமானம் நேற்று ஹூப்ளி திரும்பினர்.

பேட்டாதூரில் ஹனுமந்தப்பாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பல்லாயிரக்கணக்கான மக்கள் சாரை சாரையாக திரண்டனர். இதையடுத்து ஹனுமந்தப்பாவின் உடல் ராணுவ மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக ராணுவ வீரர் ஹனுமந்தப்பா குடும்பத்துக்கு ரூ25 லட்சம் நிதி; 4 ஏக்கர் நிலம்; அவரது குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார்.

English summary
Thousands of people gave already gathered at the home of India’s Siachen hero Lance Naik Hanumathappa, who lost a brave battle at Army’s R&R Hospital in Delhi yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X