For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருட சேவை: போக்குவரத்து தடையை மீறி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருமலை: திருமலை ஏழுமலையான் கோவிலின் பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருடவாகன சேவையை ஒட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவ விழா கடந்த 5-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 5-வது நாளான இன்று முக்கிய நிகழ்ச்சியான கருடவாகன சேவை நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வருகிறார்கள்.

தனி தெலுங்கானாவை கண்டித்து சீமாந்திராபகுதியில் போராட்டம் நடந்து வருகிறது. பஸ், வேன், கார், போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Thousands visit Tirumala for Garuda seva

திருப்பதிக்கு மட்டும்

சீமாந்திரா மின் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ஆந்திர மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. மின்சாரம் இல்லை. என்றாலும் பக்தர்களின் நலன் கருதி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் மின்விளக்கொளியில் ஜொலிக்கிறது ஏழுமலையான் கோவில்

குவிந்த பக்தர்கள்

போக்குவரத்து தடை மற்றும் பல்வேறு சிரமங்கள் உள்ளன. எனினும் அதையும் மீறி பக்தர்கள் லட்சக்கணக்கில் ஏழுமலையானை தரிசிக்க குவிந்துள்ளனர்.

பக்தர்கள் பாதிப்பு

போராட்டம் காரணமாக குடிநீர், பால் போன்ற முக்கிய சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வந்துள்ள பக்தர்களுக்கு குழந்தைகளும் இதனால் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

ரயில்கள் தாமதம்

திருப்பதி வழியாக வந்து போகும் அனைத்து ரயில்களும் 2 முதல் 3 மணி நேரம் தாமதமாக வந்து செல்கின்றன. எனினும் கருட வாகன சேவை நிகழ்ச்சியையொட்டி பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

9 மணிநேரம்

பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட கியூவில் நிற்கிறார்கள். தரிசனத்துக்கு 9 மணி நேரம் ஆகிறது' என்று பக்தர்கள் தெரிவித்தனர்.

இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி

போக்குவரத்து பிரச்சினை உள்ளதால் 2 வருடங்களுக்கு பிறகு திருமலைக்கு செல்ல இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

English summary
Thousands of devotees converged here for Garuda seva on Saturday, fifth day of the nine-day annual Brahmotsavam of the Venkateswara temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X