For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடி மீது தாக்குதல் நடத்துவோம்.. குருவாயூருக்கு வந்த பரபரப்பு மிரட்டல்!

Google Oneindia Tamil News

கொச்சி: குருவாயூருக்கு வந்த பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு கடிதம் வந்துள்ளது. பிரதர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்தப்படும் என்று வந்த அந்த கடிதத்தை தொடர்ந்து, உளவுப்பிரிவினர், பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டனர்.

கடந்த 8-ம்தேதி குருவாயூர் கிருஷ்ணர் கோயிலுக்கு பிரதமர் மோடி சென்றார். அதற்கு முன்தினம் 7 ம் தேதி இரவு 7 மணிக்கு கோயிலுக்கு மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்த கடிதம் மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் மாறி, மாறி எழுதப்பட்டு இருந்தது. இந்த கடிதம் எங்கிருந்து வந்தது என்பது போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த கடிதத்தில் ரூ.5 தபால்தலை ஒட்டப்பட்டு இருந்தது.

Threat to Modi exposed after 15 days

இந்த கடிதம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. பிரதமரின் கோயில் வருகைக்கு முன்தினம் வந்த அந்த மிரட்டல் கடிதத்தில் முகவரி எதுவும் இல்லாமல் இருந்துள்ளது. கடிதத்தை பார்த்த கோயில் நிர்வாகிகள் பிரதமரின் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பிரதமரின் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது. இந்த தகவல் உடனடியாக சிறப்பு பிரிவு பாதுகாப்பு படையினருக்கும போலீஸாருக்கும் தெரிவிக்கப்பட்டது.

தேங்கி கொண்டே போகும் வழக்குகள்.. நீதிபதிகளின் எண்ணிக்கயை அதிகரிக்க ரஞ்சன் கோகோய் வலியுறுத்தல் தேங்கி கொண்டே போகும் வழக்குகள்.. நீதிபதிகளின் எண்ணிக்கயை அதிகரிக்க ரஞ்சன் கோகோய் வலியுறுத்தல்

பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் எந்தவிதமான குளறுபடிகளும் ஏற்படாதவகையில், பாதுகாப்பு விதிமுறையின்படியே செய்யப்படும். இந்த ஏற்பாடுகள் அனைத்தும் பாதுகாப்புக்கு என நியமிக்கப்பட்டுள்ள தனிப்பிரிவு அதிகாரி மேற்பார்வை மூலம் நடைபெறும்.

இதுபோன்ற மிரட்டல் கடிதங்கள் வந்தால் அந்த செய்திகளை பாதுகாப்பு பிரிவின் பல்வேறு பிரிவுகளும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுபார்கள். குறிப்பாக எஸ்பிஜி பிரிவுக்கு உளவுத்துறை, மாநில போலீஸார், ராணுவம் ஆகியவற்றுடன் எப்போதும் தொடர்பிலும் இருப்பார்கள்.

English summary
When PM Modi visited Guruvayur a threatening letter was received and the news has been leaked now.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X