For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்து தேசியவாதத்தை அணிதிரட்ட பாகிஸ்தானுடன் இந்திய அரசு போர் பதற்றம்.. இம்ரான் கான் திடீர் ட்வீட்

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு எதிராக போர் பதற்றத்தை ஏற்படுத்த, இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து இன்று இரவு இம்ரான் கான் வெளியிட்டுள்ள ட்வீட்டுகளில் கூறியுள்ளதாவது:

மோடியின் 5 ஆண்டுகளுக்கும் மேலான இந்த அரசின்கீழ், இந்தியா தனது இந்துத்துவ மேலாதிக்க பாசிச சித்தாந்தத்துடன் இந்து ராஷ்டித்தை நோக்கி நகர்கிறது. இப்போது குடிமக்கள் சட்ட திருத்தத்திற்கு, பன்மைத்துவ இந்தியாவை விரும்பும் அனைத்து இந்தியர்களும் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர், அது ஒரு வெகுஜன இயக்கமாக மாறி வருகிறது.

Threat to Pakistan from India is increasing: Imran Khan

அதே நேரத்தில் இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (காஷ்மீரைத்தான் இப்படி சொல்கிறார் இம்ரான்) இந்திய ஆக்கிரமிப்புப் படைகளின் முற்றுகை தொடர்கிறது.

களத்திற்கு வந்தார் ராகுல் காந்தி.. டெல்லியில் நாளை காங்கிரஸ் தர்ணா.. சோனியாவும் வருகிறார்களத்திற்கு வந்தார் ராகுல் காந்தி.. டெல்லியில் நாளை காங்கிரஸ் தர்ணா.. சோனியாவும் வருகிறார்

ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்து வருவதால், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலும் அதிகரித்து வருகிறது. இந்திய ராணுவத் தலைவரின் அறிக்கை ஒரு தவறான நடவடிக்கை குறித்த எங்கள் கவலைகளை அதிகரிக்கிறது

நான் சில காலமாக சர்வதேச சமூகத்தை எச்சரித்து வருகிறேன், மீண்டும் இப்போதும் வலியுறுத்துகிறேன்: இந்தியா தனது உள்நாட்டு குழப்பத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவும், இந்து தேசியவாதத்தை அணிதிரட்டுவதற்காகவும் போரை தூண்ட நடவடிக்கை எடுத்தால், பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்பதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

English summary
Over the last 5 years of Modi's govt, India has been moving towards Hindu Rashtra with its Hindutva Supremacist fascist ideology. Now with the Citizens Amendment Act, all those Indians who want a pluralist India are beginning to protest & it is becoming a mass movement, says Pakistan PM Imran Khan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X