For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குவாரண்டைனில் இருந்த மூன்று குழந்தைகள் அடுத்தது உயிரிழப்பு.. சத்தீஸ்கரில் சோகம்

Google Oneindia Tamil News

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மூன்று தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் கடந்த 48 மணி நேரத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று சிறுமிகள் இறந்தனர், உணவளிக்கும் போது மூச்சுத்திணறல் காரணமாக இரண்டு குழந்தைகள் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்த மூன்றாவது குழந்தை நான்கு மாத குழந்தையாகும்.வியாழக்கிழமை இறந்தது. அந்த குழந்தை கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. குழந்தைக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. முடிவுக்காக அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். முன்னதாக புதன்கிழமை 18 மாத குழந்தை மற்றும் மூன்று மாத குழந்தை ஆகியவை "கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு" காரணமாக இறந்ததாக கூறப்படுகிறது.

Three children die in quarantine in last 48 hours in Chhattisgarh

உயிரிழந்த முன்று குழந்தைகளும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் ஆவர். ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் சொந்த மாநிலமான சத்தீஸ்கருக்கு மாநிலத்திற்கு திரும்பியவர் ஆவர்.

தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் வெப்பம் மற்றும் கூட்டம் அதிகமாக இருந்ததே இந்த மரணங்களுக்கு காரணம் என்று அதிகாரிகள் கூறினர். மாநில சுகாதார அமைச்சர் டி.எஸ். சிங் தியோ, மையங்களில் ஏதேனும் "குறைபாடுகள்" காணப்பட்டால் "கடுமையான நடவடிக்கை" எடுக்கப்படும் என்றார். அதேநேரம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அரசு அதிக சுமைகளை தாங்க வேண்டிய உள்ளது என்றார்.

ஒரே நாளில் கொரோனாவால் 12 பேர் மரணம்.. 11 சென்னையில் நடந்தது.. உயிரிழப்பின் ஷாக் பின்னணி ஒரே நாளில் கொரோனாவால் 12 பேர் மரணம்.. 11 சென்னையில் நடந்தது.. உயிரிழப்பின் ஷாக் பின்னணி

மே 14 முதல் தற்போது வரை சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 10 பேர் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. ஒருவர் மின்சாரம் தாக்கியும் , இரண்டு பேர் பாம்புக் கடித்தும், 2 பேர் தற்கொலை செய்தும், மூன்று பேர் நோயாலும் இறந்துள்ளார்கள்.

English summary
Three girls, including two infants, died over the last 48 hours in three separate quarantine centres across Chhattisgarh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X