ராஜஸ்தானில் நின்று கொண்டிருந்த ரயிலின் 3 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்து நாசம்
ஜோத்பூர்: ராஜஸ்தானில் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஜெய்சல்மர்-டெல்லி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸின் மூன்று பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மர் ரயில் நிலையத்தில் ஜெய்சல்மர்-டெல்லி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஞாயிற்றுக்கிழமை நின்று கொண்டிருந்தது. ரயில் டெல்லிக்கு கிளம்ப தயாராக இருந்த நிலையில் மதியம் 3 மணிக்கு திடீர் என எஸ்1, எஸ்2 மற்றும் எஸ்3 ஆகிய ஸ்லீப்பர் பெட்டிகளில் தீப்பிடித்தது.

உடனே இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். நின்று கொண்டிருந்த பெட்டிகளில் எப்படி தீப்பிடித்தது என்று தெரியவில்லை.
நல்லவேளையாக இந்த விபத்தில் பயணிகள் யாரும் காயம் அடையவில்லை. தீ விபத்தில் எஸ்2 பெட்டி முழுவதும் எரிந்து நாசமாகிவிட்டது. எஸ்1 மற்றும் எஸ்3 பெட்டிகள் சேதம் அடைந்துள்ளன.
இந்த சம்பவம் குறித்து ரயில்வே துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. யாராவது சேட்டைக்காரர்களின் வேலையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து வேறு பெட்டிகள் வரவழைக்கப்பட்டு ரயில் தாமதமாக கிளம்பிச் சென்றது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications