For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீலகிரி அருகே கேரள எல்லையில் போலீசுடன் துப்பாக்கி சண்டை- பெண் உட்பட 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

கேரளாவில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

By Mathi
Google Oneindia Tamil News

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப் பகுதியில் போலீசாருடனான துப்பாக்கிச் சண்டையில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

தமிழகம்- கேரளா- கர்நாடகா 3 மாநில எல்லைப் பகுதிகளை மாவோயிஸ்டுகள் தங்களது மறைவிடமாக பயன்படுத்தி வருகின்றனர். கோவை அருகே அட்டப்பாடி வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருந்து வந்தது.

Three Maoists dead in encounter with cops at Kerala forest

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கேரளா எல்லையில் நிலாம்பூர் வனப் பகுதியில் இன்று பிற்பகல் போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆந்திராவைச் சேர்ந்த குக்கு தேவராஜ், காவிரி என்ற அஜிதா மற்றும் அடையாளம் தெரியாத ஒருநபர் உட்பட 3 மாவோயிஸ்டுகள் இம்மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களாவர். இம்மோதலைத் தொடர்ந்து அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது,.

English summary
Kerala Police and Maoists exchanged fire at Paduka forest range in Nilambur forests. During this encounter three Maoists were killed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X