For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அந்தமான் ராஸ் தீவு சுபாஷ் சந்திரபோஸ் தீவாக பெயர் மாறியது… நேதாஜியின் கனவை நனவாக்கிய மத்திய அரசு

Google Oneindia Tamil News

போர்ட் பிளேயர்: அந்தமான் நிகோபாரில் நீல், ஹேவ்லாக் உள்ளிட்ட 3 தீவுகளுக்கு ஏற்கனவே அறிவித்தபடி புதிய பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

இரண்டாம் உலகப்போரின் போது அந்தமான் தீவை ஜப்பான் கைப்பற்றி அதன்பின் மீண்டும் ஆங்கிலேயர்கள் வசம் வந்தது. ஆங்கிலேயர்களிடம் இருந்து அந்தமான் விடுவிக்கப்பட்டதாக பிரகடனம் செய்து நேதாஜி சந்திரபோஷ் கடந்த 1943ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி போர்ட் பிளையரில் தேசியக் கொடியை ஏற்றினார்.

three popular islands in andaman and nicobar island has been changed

அப்போது அந்தமான் நிகோபர் தீவுகளை சாஹேத் மற்றும் சுவராஜ் தீவுகளாக பெயர் சூட்டப்பட வேண்டும் என்று நேதாஜி விரும்பினார். இதுகுறித்து நேதாஜியின் உறவினரும், மேற்கு வங்க பாஜக துணைத் தலைவருமான சந்திர குமார் போஸ், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றையும் எழுதி இருந்தார்.

அதன்படி, ராஸ் தீவுக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரும், நீல் தீவுகளுக்கு ஷகீத் தீப் தீவு என்று பெயர் மாற்றப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஹேவ்லாக் தீவுகளுக்கும் பெயர் மாற்றம் செய்யப்படும் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது.

இந் நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஜ் சந்திரபோஸ், அந்த மான் நிகபோர் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேரில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்த 75-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு பல்வேறு இடங்களை பார்வையிட்ட பின்னர், மரினா பூங்காவுக்கு சென்று, அங்கு மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, அந்தமான் நிகோபாரில் உள்ள ரோஸ் தீவு, நீல் தீவு, ஹேவ்லாக் தீவுகளுக்கு முறையே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீப், ஷாஹித் தீப் மற்றும் ஸ்வராஜ் தீப் என மோடி பெயர் சூட்டினார்.

English summary
The 3 islands of Andaman and Nicobar island has been changed as per Indian government announced already.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X