For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாதித்த கேரளா... இந்தியாவில் முதல்முதலாக கொரோனாவால் பாதித்த திருச்சூர் மாணவியும் குணமடைந்தார்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Kerala winning against COVID -19 | கொரோனாவை கட்டுப்படுத்த கேரளா பயன்படுத்திய புது முறை

    திருச்சூர்: கேரளாவில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு இருந்த மூன்றாவது நபரும் தற்போது குணப்படுத்தப்பட்டு உள்ளார். ஏற்கனவே இரண்டு பேர் டிசார்ஜ் ஆகி வீடு திரும்பிய நிலையில் 3வதாக முதல்முதலாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணும் தற்போது டிசார்ஜ் செய்யபட்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு யாருக்கும் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

    சீனாவில் வுஹன் நகரத்தில் இறைச்சி கூடத்தில் தோனறி கொரோனா வைரஸ் ஒரு மனிதரில் இருந்து இன்னொரு மனிதருக்கு மூச்சு காற்று மூலம் பரவும் இயல்பு உடையது.

    ஆனால் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர் முதல் 14 நாட்களுக்கு இயல்பாகே இருப்பார் என்பதால் அவர் பாதிக்கப்பட்டது தெரியாமல் மற்றவர்களுடன் பேசும் போது, பழகும் போது அப்படியே பரவி விடக்கூடியது.

    சீனாவிலிருந்து வரும் பறவைகள்.. கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து.. பொதுமக்களே உஷார்!சீனாவிலிருந்து வரும் பறவைகள்.. கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து.. பொதுமக்களே உஷார்!

    22 நாடுகளில்

    22 நாடுகளில்

    இதன் காரணமாக சீனாவின் வுகான் நகரில் பல்லாயிரம் மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அங்கிருந்து ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், துபாய் என இது உலகம் முழுக்க 22 நாடுகளில் பரவியது. இந்த வைரஸ் தாக்குதலால் மூன்று மாதங்களில் சுமார் 2000 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 80 ஆயிரம் பாதிக்கப்படுள்ளனர். நாள்தோறும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 1500 முதல் 2000 ஆக இருக்கிறது.

    2 பேர் டிசார்ஜ்

    2 பேர் டிசார்ஜ்

    இந்த வைரஸ் சீனாவின் வுகானில் தங்கிபடித்த கேரள மாணவர்கள் 3 பேருக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது திருச்சூரை சேர்ந்த மாணவிக்கும், இரண்ட மாணவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதை சுகாதராத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவர்களை தனி அறையில் தீவிரமாக சிகிச்சை அளித்தார்கள். கடந்த வாரம் தொடர் சிகிச்சைக்குப்பின் 2 பேருக்கு நடத்தப்பட்ட வைரஸ் சோதனையில் நெகட்டிவ் என வந்தது. அவர்கள் முற்றிலும் குணமானதையடுத்து கடந்த பிப்ரவரி 6ம் தேதி டிச்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    குணமடைந்தார்

    குணமடைந்தார்

    இந்நிலையில் 3வது நபரை தொடர்ந்து கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்தனர். அத்துடன் அண்மையில் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தினர். இதில் 3வது நபருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதை குறிக்கும் நெகட்டிவ் என்றே இப்போது வந்துள்ளது. இரண்டு முறை நடந்த சோதனையிலும் நெகட்டிவ் என வந்ததால் பூர்ண குணமடைந்த திருச்சூர் மாணவி தற்போது டிச்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு யாருக்கும் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

    சாதித்த கேரளா

    சாதித்த கேரளா

    கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் நோயாளிகள் 3 பேரையும் தீவிர கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்து குணப்படுத்தி இருக்கிறார்கள் கேரள மருத்துவர்கள். இந்தியாவில் வெயில் அதிகம் என்பதால் கொரோனாவின் தாக்கம் பெரிதாக ஏற்பட்வில்லை என்கிறார்கள். ஏனெனில் கொரோனா வைரஸ்க்கு வெயில் ஆகாது என்கிறார்கள். கோவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளன. அமெரிக்கா விஞ்ஞானிகள் முதற்கட்ட சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்கள். விரைவில் மருந்து கண்டுபிடிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    English summary
    India's Third Coronavirus Patient Discharged From the Medical College Hospital in Thrissur
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X