For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பசுக்களை சாப்பிட்டதற்காக மனிதர்களை போல்.. புலிகளையும் தண்டிக்கணும்.. கோவா எம்எல்ஏ

Google Oneindia Tamil News

பனாஜி: பசுக்களை சாப்பிட்டதற்காக மனிதர்கள் தண்டிக்கப்படும் போது, அதே பசுக்களை சாப்பிட்டதற்காக புலிகளும் தண்டிக்கப்பட வேண்டும் என கோவாவைச் சேர்ந்த எம்எல்ஏ சர்ச்சில் அலேமா சட்டசபையில் விசித்திரமாக பேசியிருக்கிறார்.

கடந்த ஜனவரி மாதம் கோவா மாநிலம் மகாதாய் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ளூர் மக்கள் ஐந்து பேரால் ஒரு புலி மற்றும் அதன் மூன்று குட்டிகள் கொல்லப்பட்டன.

Tigers should be punished for eating cows when humans are punished for the same: Goa MLA

இந்த விவகாரம் கோவா சட்டசபையில் விஸ்வரூபம் எடுத்தது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் திகம்பர் கமாத் இதுபற்றி சட்டசபையில் புதன்கிழமை (இன்று) நோட்டீஸ் கொடுத்து விவாதிக்க கோரினார்.

இந்த விவாதத்தில் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ சர்ச்சில் அலேமா பேசுகையில், பசுக்களை சாப்பிட்டதற்காக மனிதர்கள் தண்டிக்கப்படும் போது, அதே பசுக்களை சாப்பிட்டதற்காக புலிகளும் தண்டிக்கப்பட வேண்டும் என விசித்திரமாக பேசினார்.

கடந்த ஜனவரி மாதம் மகாதாய் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ளூர் மக்கள் ஐந்து பேரால் ஒரு புலி மற்றும் அதன் மூன்று குட்டிகள் கொல்லப்பட்டன.இந்த விவகாரம் சட்டசபையில் விஸ்வரூபம் எடுத்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ பேசுகையில், பசுக்களை சாப்பிட்டதற்காக மனிதர்கள் தண்டிக்கப்படும் போது, அதே பசுக்களை சாப்பிட்டதற்காக புலிகளும் தண்டிக்கப்பட வேண்டும். வன விலங்குளை பொறுத்தவரை புலிகள் மிக முக்கியம். அதேநேரம் மனிதர்களை பொறுத்தவரை மாடுகள் மிக முக்கியம். முழுமையாக மனிதர்கள் மீது மட்டுமே தவறு இருப்பதாக ஒரே கோணத்தில் பார்க்காதீர்கள்" என்று விசித்திரமாக பேசினார்.

இதற்கிடையில் உறுப்பினர்களின் விவாதத்திற்கு பதில் அளித்த கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், காட்டில் இருந்த அந்த புலிகள் அருகில் இருந்த கிராமத்தில் கால்நடைகளை தாக்கியதால் அந்த கிராம மக்கள் ஆத்திரத்தில் புலிகளை கொன்றார்கள் என்றார்.

English summary
NCP MLA Churchill Alemao said tigers should be "punished" for eating cows when humans are punished for the same.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X