For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலீஸ்காரர் போட்ட டிக்டாக் வீடியோ.. காணாமல் போன தந்தையை கண்டுபிடித்த மகன்.. ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

குடும்பத்தை பிரிந்த நபர் ஒருவர் அவரது குடும்பத்துடன் மீண்டும் இணைய டிக்டாக் வீடியோ ஒன்று உதவியிருக்கிறது.

Google Oneindia Tamil News

லூதியானா: குடும்பத்தை பிரிந்த மாற்றுத்திறனாளி ஒருவர் அவரது குடும்பத்துடன் மீண்டும் இணைய பஞ்சாப் போலீகாரர் எடுத்த டிக்டாக் வீடியோ உதவியிருக்கிறது.

Recommended Video

    போலீஸ்காரர் போட்ட டிக்டாக் வீடியோ.. காணாமல் போன தந்தையை கண்டுபிடித்த மகன்.. ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

    டிக்டாக் செயலி மீது உலக அளவில் பல எதிர்மறையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அந்த செயலியால் பல குடும்பங்கள் பிரிந்துள்ளதாக தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகின்றன. ஆனால் தற்போது டிக்டாக் வீடியோவால் ஒரு குடும்பம் மீண்டும் இணைந்த தகவல் வெளியாகியுள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி வெங்கடேஸ்வரலு. இவர் வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி.

    ரேஷன் கடை பற்றி பொதுமக்கள் புகார்... ஆக்‌ஷன் எடுக்க புல்லட்டில் சென்ற அமைச்சர் செல்லூர் ராஜூ ரேஷன் கடை பற்றி பொதுமக்கள் புகார்... ஆக்‌ஷன் எடுக்க புல்லட்டில் சென்ற அமைச்சர் செல்லூர் ராஜூ

    வேலை தேடி சென்றார்

    வேலை தேடி சென்றார்

    கடந்த 2018ம் ஆண்டு வெளியூர் சென்று வேலை தேடுவதற்காக ஒரு டிரக்கில் ஏறியிருக்கிறார் வெங்கடேஸ்வரலு. அசதியில் வெகு நேரம் உறங்கிவிட்டதால், இறங்க வேண்டிய இடத்தை தவறவிட்டுவிட்டார்.

    வழிமாறிய பயணம்

    வழிமாறிய பயணம்

    இதையடுத்து ஏதோ ஒரு ஊரில் இறங்கிய வெங்கடேஸ்வரலு, வேறு ஒரு டிரக்கில் ஏறி பயணத்திருக்கிறார். இப்படியே பயணித்து, தெலுங்கானாவில் இருந்து லூதியானா வந்தடைந்துவிட்டார். வாய்பேச முடியாத அவர் சைகையில் சொல்வதை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.

    தந்தையை காணவில்லை

    தந்தையை காணவில்லை

    கடந்த இரண்டு வருடங்களாக லூதியானாவின் பிளாட்பாரங்களில் உறங்கி, கிடைத்ததை சாப்பிட்டு வாழ்ந்து வந்திருக்கிறார் வெங்கடேஸ்வரலு. தந்தையை காணவில்லை என அவரது மகன் தெலுங்கானா போலீசில் புகார் அளித்தார். ஆனால் அவரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    டிக்டாக் வீடியோ

    டிக்டாக் வீடியோ

    இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் பஞ்சாப் காவல்துறையில் பணியாற்றும் அஜய் சிங் என்பவர், ஏழை மக்களுக்கு உணவு அளிக்கும் தனது வீடியோவை டிக்டாக்கில் பதிவேற்றினார். அந்த வீடியோவில் வெங்கடேஸ்வரலுக்கு அவர் உணவளிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது.

    வெடித்து அழுத மகன்

    வெடித்து அழுத மகன்

    இந்த வீடியோவை பார்த்த, வெங்கடேஸ்வரலு குடும்ப நண்பர் ஒருவர், வெங்கடேஸ்வரலுவின் மகன் பெத்திராஜுவுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசாரின் உதவியுடன் லூதியானா விரைந்த பெத்திராஜ், அஜய் சிங் மூலம் தந்தையை கண்டடைந்தார். தந்தையை பார்த்ததும் வெடித்து அழுதுவிட்டார் மகன். இந்த காட்சி அங்கிருந்தவர்களை நெகிழ வைத்துவிட்டது.

    வைரலாகும் வீடியோ

    வைரலாகும் வீடியோ

    இந்த தகவலை அஜய் சிங் தனது டிக்டாக் பக்கத்தில் வெளியிட்டார். இதையடுத்து, வெங்கடேஸ்வரலுக்கு அவர் உணவு அளித்த வீடியோ வைரலாகிவிட்டது. இதுவரை அந்த வீடியோவை 1.25 கோடி பேர் பார்த்துள்ளதுடன் 18 லட்சம் லைக்குகளும் பெற்றிருக்கிறது. டிக்டாக் வீடியோவால் இப்படி ஒரு நல்ல விஷயமும் நடந்திருக்கிறதே என டிக்டாக் வெறியர்கள் அங்கலாய்த்து வருகின்றனர்.

    English summary
    A Punjab policeman's TikTok video has helped a differently abled man to reunite with his family after two years.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X