For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்துக்கு நேரம் ஒதுக்கீடு.. யாருக்கு எவ்வளவு நேரம்?

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்துக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு.. யார் யார் ஆதரவு?

    டெல்லி: மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்துக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மத்திய பாஜக அரசுக்கு எதிராக லோக்சபாவில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 2003ஆம் ஆண்டுக்கு பிறகு சரியாக 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் லோக் சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது.

    லோக் சபாவில் மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

    மத்திய அரசுக்கு ஆதரவு

    மத்திய அரசுக்கு ஆதரவு

    தெலுங்கு தேசம் கட்சி சார்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் பாஜகவுக்கு சிவ சேனா, அதிமுக, லோக் ஜன சக்தி, சிரோன்மணி அகாலிதளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    கட்சிகளுக்கு நேரம்

    கட்சிகளுக்கு நேரம்

    இந்நிலையில் பா.ஜ.க. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்திருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்துக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    பாஜகவுக்கு 3 மணி 33 நிமிடம்

    பாஜகவுக்கு 3 மணி 33 நிமிடம்

    ஆளும் பாரதீய ஜனதாவிற்கு 3 மணி 33 நிமிடம் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 38 நிமிடம் அளிக்கப்பட்டுள்ளது.

    திரிணாமுல் காங் - 27 நிமிடம்

    திரிணாமுல் காங் - 27 நிமிடம்

    அதிமுகவுக்கு 29 நிமிடம் வழங்கப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரசுக்கு 27 நிமிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

    தெலுங்கு தேசம் 13 நிமிடம்

    தெலுங்கு தேசம் 13 நிமிடம்

    பிஜு ஜனதா தளத்திற்கு 15 நிமிடங்களும், தெலுங்கு தேசத்திற்கு 13 நிமிடம், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதிக்கு 9 நிமிடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சமாஜ்வாடி 6 நிமிடம்

    சமாஜ்வாடி 6 நிமிடம்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 7 நிமிடம், சமாஜ்வாடிக்கு 6 நிமிடம், தேசியவாத காங்கிரசுக்கு 6 நிமிடம், லோக் ஜனசக்தி கட்சிக்கு 5 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    English summary
    Time has been alloted for no confidence motion debate. 3 hour 33 mins for BJP. 38 mins for congress and 29 mins has been alloted for ADMK.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X