For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த வேண்டும்... ராணுவ வீரரின் பெற்றோர் விருப்பம்

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் யூரி பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு பதிலாக சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலை இந்தியா மீண்டும் நடத்த வேண்டும் என்று இந்திய வீரர் நாயக் ஹேம்ராஜின் பெற்றோர் கோரிக்கை வ

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் யூரி பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு பதிலாக சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனும் அதிரடித் தாக்குதலை இந்தியா மீண்டும் நடத்த வேண்டும் என்று இந்திய வீரர் நாயக் ஹேம்ராஜின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜம்மு- காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று காலை இந்திய எல்லைக்குள் 250 மீட்டர் தூரம் ஊடுருவி வந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், இரண்டு இந்திய வீரர்களை சுட்டுக் கொன்றனர். இறந்த பரம்ஜித்சிங், பிரேம்சாகர் ஆகியோர் தலையை துண்டித்து உடலை சிதைத்து, பாகிஸ்தான் ராணுவத்தினர் வெறியாட்டத்தை நடத்தினர். இதேபோல் கடந்த 2013-ஆம் ஆண்டு எல்லையில் இந்திய வீரர் லாஞ்ச் நாயக் ஹேம்ராஜ் உடலும் பாகிஸ்தான் ராணுவத்தால் சிதைக்கப்பட்டது.

Time for decisive war, says mother of martyr Lance Naik Hemraj

தற்போதும் இரு வீரர்களின் உடல்கள் சிதைக்கப்பட்டதால் வெகுண்டெழுந்த ஹேம்ராஜின் தாய், பாகிஸ்தானை கலங்கடிக்கும் வகையில் மீண்டும் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த வேண்டும். அந்நாட்டு தாக்குதலால் அப்பாவிகள் பலர் மடிந்து போகின்றனர்.

வீரர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்ற மத்திய அரசின் உறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது என்றார் அவர். கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற உரி ராணுவ முகாம் தாக்குதலில் 19 இந்திய வீரர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர். இதனால் மிகவும் கோபமடைந்த இந்திய அரசு அதிரடித் தாக்குதல் நடத்த உத்தரவிட்டது.

அதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய படைகள் தாக்குதல் நடத்தியதில் சிலர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Hemraj’s mother’s ‘decisive war’ comment in this regard is perhaps a war cry for the Indian army to prepare for such major strikes and the Pakistani action has set the way for a major diplomatic reply to the Pakistani counterparts, who have been declining the mutilation charges by the way.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X