For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஷேலா ரஷீத்தின் பொய்களை அம்பலப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.. ராணுவ லெப்டினன்ட் ஜெனரல்

Google Oneindia Tamil News

Recommended Video

    Cellphone Service restored in 5 districts in Jammu Kashmir

    ஸ்ரீநகர்: ஷேலா ரஷீத்தின் பொய்களை அம்பலப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் சதீஷ் துவா தெரிவித்துள்ளார்.

    மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் அம்மாநிலத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஷேலா ரஷீத் தமது ட்விட்டர் பக்கத்தில் ராணுவம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தார். குறிப்பாக ஜம்மு - காஷ்மீரில், மனித உரிமைகள் மீறப்படுகிறது.

    ராணுவத்தினர் வீடு வீடாக வந்து அத்துமீறி சோதனையிடுகிறார்கள். விசாரணை என்ற பெயரில், வீட்டில் உள்ள ஆண்களை அழைத்து செல்கிறார்கள். அப்பாவிகளை ராணுவம் கொடூரமாக சித்திரவதை செய்கிறது என குறிப்பிட்டு இருந்தார். இதனை ராணுவம் திட்டவட்டமாக மறுத்து இருந்தது.

    Exclusive: கோமாளித்தன முடிவுகளை விமர்சித்தால் ஜெயிலா.. கார்த்தி சிதம்பரம் எம்பி ஆவேசம்Exclusive: கோமாளித்தன முடிவுகளை விமர்சித்தால் ஜெயிலா.. கார்த்தி சிதம்பரம் எம்பி ஆவேசம்

    சட்டத்தின் படி நடவடிக்கை

    சட்டத்தின் படி நடவடிக்கை

    இந்நிலையில் ராணுவத்தில் ஸ்ரீநகர் படைப்பிரிவில் காமாண்டராக பணியாற்றியவர் லெப்டினன்ட் ஜெனரல் சதீஷ் துவா. இவர் தற்போது ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் காஷ்மீர் தொடர்பாக ஷேலா ரஷீத் தொடர்ந்து பொய்களை பேசிவருவதாகவும் அவர் மீது சட்டத்தின் படி நடவடிக்கை எடுத்து அவரது பொய்களை அம்பலப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

    முற்றிலும் தேசவிரோதம்

    முற்றிலும் தேசவிரோதம்

    இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் அண்மைக்காலமாக ஷேலா ரஷீத்தின் டுவிட்டர் பதிவுகளை பார்த்து வருகிறேன். அவர் செய்து கொண்டிருப்பது முற்றிலும் தேசவிரோத செயலாகும். ராணுவம் ஷேலா ரஷீத்தின் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள போதிலும், இன்னொரு சரியான செயலை வேண்டியது அவசியம் ஆகும்.

    பிரிவினைவாதிகள் பேச்சு

    பிரிவினைவாதிகள் பேச்சு

    ஐபிசி மற்றும் ஐடி சட்டங்கள் மூலம் நடவடிக்கை எடுத்து ஷேலா ரஷீத்தின் பொய்களை அம்பலத்த வேண்டும். நாம் பிரிவினைவாதிகள் விரும்புவதை சொல்ல அனுமதித்த காரணத்தால் நாம் நீண்ட காலமாகவே காஷ்மீர் தகவல் போரை இழந்துவிட்டோம். எனவே அவர்களை நாம் சம்பந்தபட்ட சட்டங்களின் கீழ் நீதிமன்றத்திற்கு நாம் அழைத்துச் சென்று இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

    டெல்லி போலீசார் வழக்கு

    டெல்லி போலீசார் வழக்கு

    முன்னதாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர், அலக் அலோக் ஸ்ரீவத்சா என்பவர், டெல்லி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, ஷேலா ரஷீத் மீது, தேச துரோகம், கலவரத்தை துாண்டுவது, நாட்டின் அமைதியை குலைப்பது உட்பட, பல்வேறு பிரிவுகளில், டில்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

    English summary
    need to be applied under the IPC and IT Act, and Shehla lies need to be exposed: Lt Gen Satish Dua (retd)
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X