For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'ஸ்டிங் அட்டாக்' எதிரொலி... டைம்ஸ் நவ் டிவியும் கருத்துக் கணிப்பை நிறுத்துகிறது

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியைச் சேர்ந்த நியூஸ் எக்ஸ்பிரஸ் இந்தி டிவி நிறுவனம் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் எதிரொலியாக தற்போது டைம்ஸ் நவ் டிவியும் தனது கருத்துக் கணிப்புகளை நிறுத்துவதாக தகவல்கள் கூறுகின்றன.

நியூஸ் எக்ஸ்பிரஸ் டிவி கருத்துக் கணிப்புகளை எந்த அளவுக்கு போலியானதாக, மோசடியாக செய்கிறார்கள் என்பதை ஸ்டிங் ஆபரேஷன் மூலம் அம்பலப்படுத்தியுள்ளது.

அது ஸ்டிங் ஆபரேஷன் நடத்திய கருத்துக் கணிப்பு நிறுவனங்களில் ஒன்று சி வோட்டர். இதையடுத்து சிவோட்டர் மூலம் கருத்துக் கணிப்புகளை வாங்கிப் போட்டு வந்த இந்தியா டுடே தனது கருத்துக் கணிப்புகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இந்த வரிசையில் தற்போது டைம்ஸ் நவ் டிவியும் இணைகிறது. இந்த டிவியின் கருத்துக் கணிப்புகளின்போது அர்னாப் கோஸ்வாமி, தொண்டை கிழிய. டிவி ஸ்கிரீன் கிழிய கத்துவது கொஞ்ச நாளைக்கு இருக்காது என்று நம்பலாம்.

ஒரு வருட காலமாகவே பொய்ப் பிரசாரம்

ஒரு வருட காலமாகவே பொய்ப் பிரசாரம்

கடந்த ஒரு வருட காலமாகவே பல்வேறு டிவிகளிலும், நாளேடுகளிலும் இந்த கருத்துக் கணிப்புகள் கச்சை கட்டியிருந்தன. இவற்றையெல்லாம் அக்குவேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்திருக்கிறது நியூஸ் எக்ஸ்பிரஸ் சானலின் ஸ்டிங் ஆபரேஷன். இதில் பல கருத்துக் கணிபப்புகள் பொய்யானவை என்று அது கூறுகிறது.

கட்சிக்காரர்கள் போல போய்

கட்சிக்காரர்கள் போல போய்

11 கருத்துக் கணிப்பு நிறுவனங்களை அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் போல போய் அணுகி இந்த ஸ்டிங்கை நடத்தியுள்ளனர்.

2 டேட்டா

2 டேட்டா

இந்த நிறுவனங்களிடம் பேசும்போது கட்சிகளுக்காக இரண்டு டேட்டாக்களை அவர்கள் தயார் செய்வது தெரிய வந்தது. அதாவது உள்ளது உள்ளபடியே ஒரு டேட்டா. இன்னொன்று திரித்துக் கூறப்பட்ட தகவல்களுடன் கூடியது.

இரண்டுக்கும் தனித் தனி ரேட்

இரண்டுக்கும் தனித் தனி ரேட்

இந்த இரண்டு டேட்டாக்களுக்கும் தனித் தனியாக ரேட் போட்டு வசூலித்துள்ளனர்.

தேவைக்கேற்ப திருத்த ரேட் ஜாஸ்தி

தேவைக்கேற்ப திருத்த ரேட் ஜாஸ்தி

இது போக தங்களது தேவைக்கேற்ப தகவல்களை திரித்துத் தர வேண்டுமானாலும் அதற்கும் தனியாக ரேட் தர வேண்டுமாம்.

மாட்டிய சி வோட்டர்

மாட்டிய சி வோட்டர்

இந்த மோசடி நிறுவனங்களில் சி வோட்டர்தான் நிறைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளது. எல்லாமே பாஜகவுக்கு ஆதரவானதுதான். இதனால் இந்த நிறுவனத்தின் கருத்துக் கணிப்புகள் அனைத்துமே பெரும் மோசடியானவை என்ற கருத்து எழுந்துள்ளது.

கியூ ஆர் எஸ் போட்ட பாஜக வானவெடி

கியூ ஆர் எஸ் போட்ட பாஜக வானவெடி

இதில் கியூ ஆர் எஸ் என்ற நிறுவனம், பாஜகவுக்கு உ.பி. சட்டசபைத் தேர்தலில் 200 சீட் கிடைக்கும் என்று பச்சையாக பொய் புழுகிய நிறுவனமாகும். அதேபோல சமாஜ்வாடிக் கட்சிக்கும் இதேபோன்ற ஒரு பொய் தகவலை அது தயாரித்துக் கொடுத்ததாம்.

ஆதாரம் இல்லை

ஆதாரம் இல்லை

ஆனால் இந்தத் தகவல்களுக்கு ஆதாரம் எதுவும் தங்களிடம் இல்லை என்று நியூஸ் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் ரவிகாந்த் மிட்டல் தெரிவித்துள்ளார்.

கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் எந்த அளவுக்கு நம்பகத்தன்மை இல்லாதவை, என்னவெல்லாம் செய்கின்றன என்பதை மக்களிடம் வெளிக்காட்டுவதே தங்களது நோக்கம் என்று இவர் கூறுகிறார்.

கெஜ்ரிவால் அதிர்ச்சி

கெஜ்ரிவால் அதிர்ச்சி

இந்த ஸ்டிங் ஆபரேஷன் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால், இது அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

English summary
A sting operation by news and current affairs channel News Express claims to have exposed malpractices of 11 opinion poll agencies. The channel claimed these pollsters were willing to manipulate data and provide “misleading results”. Following the exposé, the India Today group suspended the services of an agency implicated in the operation. Now sources say that Times Now TV is also stopping its polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X