For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லியில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது- பாஜக 29, காங் 23, ஆம் ஆத்மி கட்சி 17

By Chakra
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் இன்று நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் அங்கு எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று தெரியவந்துள்ளது.

டைம்ஸ் நவ்- சி வோட்டர் ஆகியவை டெல்லி தேர்தலில் மதியம் 1 மணி வரை பதிவான வாக்குகளை அடிப்படையாக வைத்துள்ள வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில்,

டெல்லி சட்டசபையில் மொத்தமுள்ள 70 இடங்களில் இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு 29 இடங்களும், காங்கிரசுக்கு 23 இடங்களும், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு 17 இடங்களும் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

Times Now C-voter exit polls gives 16 seats to AAP: Delhi to end up with hung assembly

இதன்மூலம் டெல்லியில் முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியை இழக்கிறது. அதே நேரத்தில் பாஜகவும் அங்கு தனித்து ஆட்சியை அமைக்க முடியாது.

ஆட்சியமைக்க 35 இடங்கள் தேவை என்ற நிலையில் ஆம் ஆத்மி கட்சி யாருடன் கூட்டு சேருகிறதோ அந்தக் கட்சியே ஆட்சியை அமைக்கும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

ஆனால், தனிப் பெரும் கட்சியாக பாஜக உருவாகும் என்பதால் அங்கு அந்தக் கட்சியே ஆட்சியமைக்க அதிக வாய்ப்புள்ளது.

English summary
Times Now C-voter exit polls gives 16 seats to AAP: Delhi to end up with hung assembly
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X