For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜக கூட்டணி 249, காங். 148: அதிமுக- 31, திமுக- 7, தேமுதிக-0, பாமக-0, மதிமுக-0: டைம்ஸ் நவ்!

By Chakra
|

டெல்லி: நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு தேசிய அளவில் 249 இடங்களே கிடைக்கும் என்றும், காங்கிரஸ் கூட்டணிக்கு 148 இடங்களே கிடைக்கும் என்றும் டைம்ஸ் நவ் எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக, திமுக உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு 146 இடங்கள் கிடைக்குமாம்.

மிக மிக அதிகபட்சமாக பாஜக கூட்டணிக்கு 265 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆட்சியமைக்கத் தேவையான 272 இடங்களை பாஜக கூட்டணி எட்டாது என்கிறது டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு.

பாஜகவுக்கு தனிப்பட்ட முறையில் 218 இடங்களே கிடைக்கும். காங்கிரஸ் கட்சிக்கு 105 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

2014 நாடாளுமன்றத் தேர்தலின் அனைத்துக் கட்ட வாக்குப் பதிவுகளும் இன்று முடிவடைந்தன.

நாட்டின் 543 தொகுதிகளுக்கும் 9 கட்டமாக வாக்குப் பதிவு நடந்தது. இதையடுத்து டைம்ஸ் ஆப் இந்தியாவின் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி தனது எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட்டது. அதன் விவரம்:

தமிழகத்தில்...

தமிழகத்தில்...

தமிழகத்தில் அதிமுகவுக்கு 31 இடங்களும், திமுகவுக்கு 7 இடங்களும், காங்கிரசுக்கு 1 இடமும் கிடைக்கும். தேமுதிக, பாமக, மதிமுக, கொங்கு கட்சி ஆகியவை இணைந்த பாஜக கூட்டணிக்கு ஒரு இடமும் கிடைக்காது என்கிறது இந்தக் கருத்துக் கணிப்பு.

அதே போல புதுச்சேரியில் காங்கிரஸ் வெல்லும் என்கிறது.

உத்தரப் பிரதேசத்தில்...

உத்தரப் பிரதேசத்தில்...

உத்தரப் பிரதேசத்தில் பாஜக-52 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 10 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 8 இடங்களிலும், காங்கிரஸ் 10 இடங்களிலும் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான்....

ராஜஸ்தான்....

ராஜஸ்தானில் காங்கிரசுக்கு 14 இடங்களும், பாஜகவுக்கு 10 இடங்களும் கிடைக்கும். இங்கு ஆம் ஆத்மி கட்சி 10% வாக்குகளைப் பெறுவதால் பாஜகவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் வாக்கு வித்தியாசம் இரு கட்சிகளுக்கும் இடையே மிக மிகக் குறைவாக உள்ளது. சிறிய அளவில் மாற்றம் ஏற்பட்டாலும் பாஜகவுக்கு 17 இடங்கள் கிடைக்கும்.

குஜராத்..

குஜராத்..

குஜராத்தில் மொத்தமுள்ள 26 இடங்களில் பாஜக 22 இடங்களிலும் காங்கிரஸ் 4 இடங்களிலும் வெல்லும் என்கிறது எக்ஸிட் போல். முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தியதால் எல்லா இடங்களிலும் பாஜக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 22 இடங்களை மட்டுமே பாஜக பிடிக்கிறது.

மகாராஷ்டிரா...

மகாராஷ்டிரா...

மகாராஷ்டிரத்தில் பாஜக-சிவசேனா கூட்டணிக்கு 27 இடங்களும், காங்கிரஸ்- சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 21 இடங்கள் கிடைக்கும்.

மற்ற மாநில முடிவுகள்:

மற்ற மாநில முடிவுகள்:

கேரளா- காங்கிரஸ் கூட்டணி-18, இடதுசாரிகள்-2

கர்நாடகம்- பாஜக-18, காங்கிரஸ்- 9, மதசார்பற்ற ஜனதா தளம்- 1

சீமாந்திரா- பாஜக- தெலுங்கு தேசம் கூட்டணி- 17, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்- 8, காங்கிரஸ்- 0

தெலுங்கானா- டிஆர்எஸ்- 9, காங்கிரஸ்- 4, பாஜக- தெலுங்கு தேசம் கூட்டணி- 2, இடதுசாரிகள்-2

ஜார்க்கண்ட்- பாஜக-7, காங்கிரஸ்-6, மற்றவை-1

ஒடிஸ்ஸா- நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் 15, காங்கிரஸ்- 5, பாஜக-1

மேற்கு வங்கம்- திரிணமூல் காங்கிரஸ் 20, இடதுசாரிகள் 15, காங்கிரஸ் 5, பாஜக 2

பிகார்- பாஜக 28, ஐக்கிய ஜனதா தளம்- 10, காங்கிரஸ், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம்- 0

பஞ்சாப்- பாஜக- 7, காங்கிரஸ்- 6

மத்தியப் பிரதேசம்

மத்தியப் பிரதேசம்

பாஜக-16, காங்கிரஸ்-11, பகுஜன் சமாஜ் கட்சி- 2. இந்த மாநிலத்தில் பாஜக அதிக இடங்களில் வெல்லும் என கருதப்பட்ட நிலையில் 16 மட்டுமே வெல்லும் என்கிறது கருத்துக் கணிப்பு.

டெல்லி

டெல்லி

பாஜக- 6, காங்கிரஸ்- 1 இடத்தில் வெல்லும். ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு இடமும் கிடைக்காது

உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு மிக பிரமாண்டமாக வெற்றி கிடைக்கும். இங்கு பாஜக- 52, சமாஜ்வாடி கட்சி-10, பகுஜன் சமாஜ் கட்சி- 8, காங்கிரஸ்- 10 இடங்கில் வெல்லும்.

English summary
Times Now Exit poll 2014 predidcts BJP will get 249 seats and Congress will end up with 148 seats. In Tamil Nadu BJP alliance will not even win a single seat
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X