For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடக அரசியல் முடிவை அப்போதே கணித்த ஜன் கீ பாத்.. சொன்னபடியே நடந்தது!

கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று ஜன் கீ பாத் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் கூறப்பட்டது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற காரணம்- வீடியோ

    பெங்களூர்: கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று ஜன் கீ பாத் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் கூறப்பட்டது. அவர்கள் நடத்திய கருத்து கணிப்பு அப்படியே உண்மையாகி உள்ளது.

    கர்நாடக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது . மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து உள்ளது.இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலேயே பாஜக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தது.

    Times Now-Todays Chanakya perfectly predicts BJPs victory in exit poll

    இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 104 இடங்களில் பாஜக கட்சியே முன்னிலை வகிக்கிறது. அதற்கு அடுத்த இடத்தை 75 இடங்களுடன் காங்கிரஸ் பெற்றுள்ளது. 41 இடங்களுடன் மதசார்பற்ற ஜனதா தளம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. பாஜக தனிப்பெரும்பான்மையை இழந்துள்ளது.

    இந்த நிலையில் யாருக்கும் வெற்றி உறுதியாகவில்லை. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பல சேனல்கள் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கூறி இருந்த போதும் ஜன் கீ பாத் மட்டும் மிக துல்லியமாக யாருக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்று துல்லியமாக கூறியது.

    கர்நாடகாவில் ஜன் கீ பாத் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியானது. பாஜக 93-114 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் அப்போது அதை யாரும் பெரிதாக நம்பவில்லை. அதன்படி பாஜக கட்சி பெரிய அளவில் வெற்றி பெற்றும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

    222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து இருப்பதால் பெரும்பான்மை பெற 112 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். காங்கிரஸ் 73 -82 தொகுதிகளில் வெற்றி பெறும். ஜேடிஎஸ் 33-42 தொகுதிகளில் வெற்றி பெறும்.மற்ற கட்சி, சுயேட்சைகள் 2- 3 தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்று கூறப்பட்டு இருந்தது. அவர்கள் நடத்திய கருத்து கணிப்பு அப்படியே உண்மையாகி உள்ளது.

    English summary
    Jan Ki Baat exit poll perfectly predicts Karnataka election result.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X