For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மார்கழி மாத பிறப்பு... திருச்செந்தூர் முருகர் கோவிலில் நடைதிறப்பு நேரம் மாற்றம்

Google Oneindia Tamil News

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மார்கழி மாதத்தை தொடர்ந்து கோவில் நடை திறக்கும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக பக்தர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் நாளை மார்கழி 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை (டிச 16ம் தேதி முதல் ஜனவரி 4ம் தேதிவரை) நடை திறப்பு நேரம் வருமாறு: அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்தாண்ட அபிஷேகம், 4.45 மணிக்கு தீபாராதனை, காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி தீபாரதனை, 6 மணிக்கு கால சாந்தி தீபாரதனை, 7.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், 8.45 முதல் 9 மணி வரை உச்சிகால தீபாரதனை, மாலை 3.30 மணிக்கு சாயராட்சை தீபாரதனை, 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், 7.30க்கு ஏகாந்த தீபாரதனை, 8 மணிக்கு பள்ளியறை தீபாரதனை, நடை திருக்காப்பிடுதல் நடைபெறும்.

Tiruchendur Subramaniya Swamy Temple will be open at early morning

ஜனவரி 1ம் தேதி புத்தாண்டையொட்டி, அதிகாலை 1 மணிக்கு நடை திறப்பு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், மற்ற கால பூஜைகளை தொடர்ந்து நடைபெறும்.

ஜனவரி 5ம் தேதி ஆருத்ரா தரிசனத்தன்று அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு 2. 30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 3 மணிக்கு அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். தைப் பொங்கல் அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறப்பு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். இந்த தகவலை கோயில் தக்கார், கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் ஞானசேகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

English summary
Tiruchendur Subramaniya Swamy Temple will be open at early morning for Darshan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X