For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சந்திர கிரகணம்... ஆகஸ்ட் 7ல் திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடல் - சேவைகள் ரத்து

சந்திர கிரகணத்தையொட்டி ஆகஸ்ட் 7ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படவுள்ளதாகத் தேவஸ்தானம் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருப்பதி: ஆகஸ்ட் 7 ஆம் தேதி திங்கட்கிழமையன்று சந்திரகிரகணம் ஏற்படவுள்ளதால், திருப்பதி ஏழுமலையான் கோயில் மாலை நான்கரை மணியிலிருந்து 8 ஆம் தேதி காலை 2 மணி வரை மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.

சந்திர கிரகணத்தின் போது அனைத்துக் கோவில்களின் நடைகளும் சாத்தப்படுவது வழக்கம். கிரகணம் முடிந்த பின்னர் கோவில்களைக் கழுவி சுத்தம் செய்வார்கள்.

Tirumala Temple will be closed on August 7th due to Lunar Eclipse

தமிழகம் முழுவதும் உள்ள பிரபல ஆலயங்களில் தரிசனங்கள் ரத்து செய்யப்படும். திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில், ஆகஸ்ட் 7ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.

7 ஆம் தேதி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்கர தீப அலங்கார சேவை உள்ளிட்ட சேவைகள் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

8ஆம் தேதி அதிகாலை 2 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டு கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு வழக்கமான வழிபாடுகள் நடைபெறும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 8ஆம் தேதி காலை 7 மணியில் இருந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The temple of Lord Venkateswara, in Tirupati will remain closed on August 7th and 8th in view of lunar eclipse. Official sources said the doors of the main temple will be closed at 4.30 p.m. on August 7 and will be reopened at 2 a.m.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X