For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருப்பதி கோயிலில் 9 நாட்களுக்கு தரிசனம் ரத்து.. தேவஸ்தானம் அறிவிப்பு!

திருப்பதி கோயிலில் 9 நாட்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    9 நாட்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

    திருப்பதி: திருப்பதி கோயிலில் 9 நாட்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    திருப்பதி தேவஸ்தானம் கோயிலில் வெங்கடாஜலபதியை தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசிப்பது வழக்கம். கோடை விடுமுறை, தொடர் விடுமுறை, பிரம்மோற்சவம் ஆகிய நாட்களில் இந்த எண்ணிக்கை லட்சக்கணக்கை தாண்டும்.

    Tirupati Devasthanams announces that darshan cancelled for certain dates

    ஏழுமலையானை இந்திய மக்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் என தரிசனம் செய்வது வழக்கம். சனி, ஞாயிறுகளில் நடைபாதை தரிசனம் அதிகரிப்பதால் தர்ம தரிசனம் பக்தர்கள் 24 மணி நேரங்களுக்கு மேல் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதை தடுக்க வெள்ளிக்கிழமை மாலை ஞாயிற்றுக்கிழமை வரை நடைபாதை தரிசனம் எனப்படும் திவ்ய தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் திருப்பதி கோயிலில் 9 நாட்கள் தரிசனத்திற்கு அனுமதியில்லை என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதாவது ஆக. 9 முதல் 17ம் தேதிவரை எந்த தரிசனத்திற்கு அனுமதியில்லை.

    மேற்கண்ட காலகட்டத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனால் ஆகஸ்ட் 9 -ஆம் தேதி மாலை 6 மணி முதல் 17-ஆம் தேதி காலை 6 மணி வரை தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

    English summary
    From August 9 to 16 there will no darshan in Tirupati Devasthanam because of Kumbabishekham.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X