For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேலையைவிட்டு தூக்கிடலாமா.. சர்ச்சுக்கு சென்ற பணியாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய திருப்பதி தேவஸ்தானம்

பிற மதத்தை சேர்ந்த 44 பணியாளர்களை வேலையைவிட்டு நீக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

திருப்பதி: பிற மதத்தை சேர்ந்த பணியாளர்களை வேலையைவிட்டு நீக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்து இருக்கிறது. இதுகுறித்து விளக்கம் கேட்டு தேவஸ்தான போர்ட் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

தேவஸ்தான பணியாளர் ஒருவர் சர்ச்சுக்கு சென்ற வீடியோ வெளியானதை அடுத்து இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. இத வீடியோ வைரல் ஆகி உள்ளது.

இந்த நோட்டீஸ் பார்த்த பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். இந்த நோட்டீஸுக்கு எதிராக வழக்கு தொடுக்க வாய்ப்பு இருக்கிறது.

ஆரம்பம்

ஆரம்பம்

திருப்பதி கோவிலில் வேலை பார்க்கும் முக்கிய பணியாளர் ஒருவர் சில நாட்களுக்கு முன் அங்கு இருக்கும் சர்ச் ஒன்றிருக்கு சென்றுள்ளார். அவர் தேவஸ்தான வாகனத்தில் செல்லும் நிகழ்வு அங்கிருந்தவர்களால் ரெகார்ட் செய்யப்பட்டு இருக்கிறது. இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

விளக்கம்

விளக்கம்

இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி தேவஸ்தான போர்ட் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. உங்களை எதற்கு பணியில் வைத்து இருக்க வேண்டும் என்று விளக்கம் கேட்டு உள்ளது. சரியாக விளக்கம் கொடுக்க வில்லை என்றால் பணியில் இருந்து நீக்கப்படுவீர்கள் என்று கூறப்பட்டு உள்ளது.

இன்னும் 43 பேர்

இன்னும் 43 பேர்

அவர் போக இன்னும் 43 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த 43 பேரும் வேறு மதத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு 3 வாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

பயம்

பயம்

இந்த நோட்டீஸ் பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதில் பல பேர் நீண்ட வருடமாக இந்துக்களாக வாழ்ந்து வருபவர்கள். இந்து முறையில் திருமணம் செய்து குடும்பம் நடத்துபவர்கள். அரசு சான்றிதழ்களில் மட்டுமே இவர்களுக்கு மாற்று மத அடையாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tirupati Temple issues notice 44 non-hindu workers seeking explanation on their employment. The board has decided to terminate them if they wouldn't give proper explanation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X