For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விண்ணுக்கு அனுப்பின செயற்கைகோள் வெற்றிகரமாக போகனும்... விஞ்ஞானிகள் திருப்பதியில் வேண்டுதல்: வீடியோ

இஸ்ரோ நிறுவனம் நேற்று காலை பி.எஸ்.எல்.வி-சி 38 ராக்கெட் மூலம்,கார்ட்டோசாட் - 2 செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது. அது வெற்றிகரமாக விண்ணுக்குச் சென்று சேர வேண்டுமென இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதியில் பிரார

By Suganthi
Google Oneindia Tamil News

திருப்பதி: திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் பி.எஸ்.எல்.வி -சி 38 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக சென்றடைய வேண்டும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபாடு நடத்தினர்.

இஸ்ரோ நிறுவனம் நேற்று காலை பி.எஸ்.எல்.வி-சி 38 ராக்கெட் மூலம்,கார்ட்டோசாட் - 2 செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது. இந்த செயற்கைகோளுடன் 29 வெளிநாட்டு நானோ செயற்கை கோள்களையும் ஒரு இந்திய நானோ செயற்கை கோளையும்விண்ணில் செலுத்தியது.

Tirupati Temple Prayer Scientist Isro

இந்த செயற்கைகோள்கள் மூலம் பூமியைக் கண்காணிக்க முடியும். இந்த செயற்கைகோள் வெற்ரிகரமாக விண்ணை அடைய வேண்டும் என்ற வேண்டுதலுடன் இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுராப், கிருஷ்ணமூர்த்தி, சாந்தன் உள்ளிட்டோர் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் தரிசனம் செய்தனர்.

செயற்கைகோள்களை விண்னில் செலுத்துவதில் இஸ்ரோ முன்னிலை வகிப்பதால், வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் செயற்கை கோளை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோவை நாடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Isro scientists Anuraap, krishnamoorthi, Santhan prayed in Tirupati temple that their PSLV rocket which is sent on Friday must successfully reach the space.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X