For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெங்கு பாதிப்பால் டைட்டன் வாட்ச் நிறுவனர் செர்க்ஸெஸ் தேசாய் மரணம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

பெங்களூர்: இந்தியாவின் முன்னணி வாட்ச் நிறுவனங்களில் ஒன்றான டைட்டன் வாட்ச் நிறுவனத்தின் செர்க்ஸெஸ் தேசாய் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் இன்று காலமானார். அவருக்கு வயது 79.

வாட்ச் என்றால் நம் அனைவருக்கும் பிடிக்கும். அதிலுல் டைட்டன் வாட்ச் கட்டினால் ஒரு ரிச் லுக்கே வந்து விடும். நாம் அனைவரும் அது தனியார் நிறுவனம் என்று தானே நினைத்து வந்து உள்ளோம் ஆனால் அதில் தமிழக அரசுக்கும் உரிமை உள்ளது.

Titan founder Xerxes Desai passes away

டைட்டன் நிறுவனம் டாடா குழுமம் மற்றும் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கார்ப்ப ரேஷன் (டிட்கோ) கூட்டணியில் ஏற்படுத்தப்பட்ட நிறுவனமாகும். இந்நிறுவனம் வாட்ச், தங்க ஆபரணம் மற்றும் கண் கண்ணாடிகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.

உலகளவில் வாட்ச் தயாரிக்கும் கம்பெனிகளில் டைட்டன் நிறுவனம் 5 வது இடத்தில் உள்ளது. 32 நாடுகளுக்கு டைட்டன் வாட்ச் அனுப்பபடுகிறது. சோனாடா, பாஸ்ட்டிராக் போன்றவைகளும் இவர்களுடையது தான்.

இந்நிலையில் டைட்டன் வாட்ச் கம்பெனியின் நிர்வாக இயக்குனர் செர்க்ஸெஸ் தேசாய் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இன்று காலமானார். இதனை டாடா குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

செர்க்ஸெஸ் தேசாய் டாடா கெமிக்கல் கம்பெனி, டாடா ஹோட்டல் உள்ளிட்ட டாடா குழுமத்தின் பிற நிறுவனங்களிலும் நிர்வாக இயக்குனராக இருந்துள்ளார்.

English summary
Xerxes Desai, who started Titan and transformed it into India's largest watchmaker, died here on Monday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X