For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நேற்று ராகுல் காந்தி... இன்று ஹத்ராஸில் கீழே தள்ளி விடப்பட்ட... திரிணமூல் காங்கிரஸ் எம்பி பிரெய்ன்!!

Google Oneindia Tamil News

ஹத்ராஸ்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் சென்று கொண்டிருந்த திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு போலீசாரால் தாக்கப்பட்டனர். போலீசாரால் எம்பி தெரிக் ஓ பிரைன் கீழே தள்ளி விடப்பட்டதால் பர பரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தலித் பெண் ஒருவர் நான்கு இளைஞர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.

ஹத்ராஸ் சென்ற ராகுல், பிரியங்கா காந்தி எந்த சட்டத்தின் கீழ் கைது? ஹத்ராஸ் சென்ற ராகுல், பிரியங்கா காந்தி எந்த சட்டத்தின் கீழ் கைது?

பிரியங்கா

இவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்கு சென்று கொண்டு இருந்த காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டனர். ராகுலை போலீசார் சட்டையைப் பிடித்து தள்ளியதால், நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

அத்துமீறல்

அத்துமீறல்

ஹத்ராஸ் பகுதிக்குள் யாரும் செல்ல முடியாதவாறு 144 தடையுரத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது. இதையடுத்து நேற்று சென்று இருந்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். ராகுல் காந்தியிடம் போலீசார் அத்துமீறி நடந்து கொண்டதற்கு காங்கிரசார் நாடு முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மோதல்

மோதல்

இந்த நிலையில் இன்று ஹத்ராஸ் சென்று கொண்டு இருந்த திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து 200 கி. மீட்டர் தொலைவிற்கு பயணம் செய்த எம்பி தெரிக் ஓ பிரைனை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதில் ஏற்பட்ட மோதலில் பிரைன் கீழே விழுந்தார். இவருடன் எம்பிக்கள் ககோலி கோஷ் தஸ்திதர், பிரதிமா மண்டல், மம்தா தாகூர் ஆகியோர் சென்று இருந்தனர்.

தனித்தனியாக

தனித்தனியாக

இவர்கள் கூறுகையில், ''பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு நாங்கள் தனித்தனியாக சென்று ஆறுதல் கூற இருந்தோம். ஆனால் எங்களை ஏன் தடுத்தனர் என்று தெரியவில்லை. மிருகத்தனமான ராஜ்ஜியம் நடத்துகின்றனர். இன்னும் நாங்கள் 1.5 கி. மீட்டர் சென்றால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் வீட்டுக்கே சென்று விடுவோம்'' என்று தெரிவித்துள்ளனர்.

English summary
TMC delegation being roughed up by Uttar Pradesh Police at #Hathras border
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X