For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேற்குவங்க உள்ளாட்சி தேர்தலில் 90 சதவீத இடங்களை கைப்பற்றியது திரிணாமுல் காங்கிரஸ்!

மேற்குவங்க உள்ளாட்சி தேர்தலில் 90 சதவீத இடங்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது.

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்குவங்க உள்ளாட்சி தேர்தலில் 90 சதவீத இடங்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில், ஒரே கட்டமாக கடந்த 14 ஆம் தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. இந்த உள்ளாட்சி தேர்தலில் 621 ஜில்லா பரிஷத், 6,123 பஞ்சாயத்து சமித் 31802 கிராம பஞ்சாயத்துக்களுக்கு தேர்தல் நடைபெற்றது.

நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு நடைபெற்ற இந்த பஞ்சாயத்து தேர்தலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இருப்பினும் உள்ளாட்சித் தேர்தலின் போது வன்முறை வெடித்தது.

தேர்தல் முடிவுகள்

தேர்தல் முடிவுகள்

இதில் 10க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே நேற்று வெளியிடப்பட்டன.

90% இடங்களில் வெற்றி

90% இடங்களில் வெற்றி

இதில் பெரும்பாலான கிராம பஞ்சாயத்து இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதுதொடர்பாக பேசிய மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரசுக்கு 90 சதவீத இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது.

மமதா கருத்து

மமதா கருத்து

"எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு வந்தாலும் 90 சதவிகித இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம்" என்று மமதா பானர்ஜி கூறியுள்ளார்.

டிஎம்சி வெற்றி

டிஎம்சி வெற்றி

2013 பஞ்சாயத்துத் தேர்தல்களில், டி.எம்.சி 90 சதவிகித இடங்களை வென்றது, அனைத்து ஜில்லா பரிஷத் இடங்களையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

English summary
TMC has won in 90 per cent of the seats in West Bengal Panchayat Election. West bengal panchayat election results has announced yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X