For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திரிணாமுல் எம்.பி. குணால் கோஷ் கட்சியிலிருந்து சஸ்பென்ட்!

By Mathi
Google Oneindia Tamil News

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிருப்தி எம்.பி. குணால் கோஷ் இன்று சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குணால் கோஷ், கட்சி தலைமைக்கு எதிராக குரல் கொடுத்தார். இதைத் தொடர்ந்து குணால் கோஷ் மற்றும் அவருடன் சேர்ந்து கலகக் குரல் எழுப்பிய ஷதாப்தி ராய், தபாஸ் பால் ஆகியோருக்கு கட்சி மேலிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

TMC MP Kunal Ghosh suspened from party

நாட்டை உலுக்கிய சாரதா சிட் பண்ட் முறைகேட்டிலும் குணால் கோஷ் மீது புகார் கூறப்பட்டது. மேலும் தம் மீது கட்சி நடவடிக்கை எடுத்தால் சாரதா சிட் பண்ட் முறைகேட்டில் தொடர்புடைய கட்சியின் மூத்த தலைவர்களை அம்பலப்படுத்துவேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக குணால் கோஷ் எம்.பி.யை கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்திருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

English summary
Trinamool Party's MP Kunal Ghosh suspended from party for anti-party acts. Ghosh was among those implicated in the Saradha chit fund scam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X