For Daily Alerts
Just In
மே.வங்கம்: மமதா ஆட்சியை தக்க வைக்க வாய்ப்பு; திரிணாமுல்-க்கு 154-162 இடங்கள் கிடைக்கும்:ஏபிபி சர்வே
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்க வாய்ப்புகள் உள்ளதாக ஏபிபி சி வோட்டர் சர்வே முடிவுகள் தெரிவித்துள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 154 முதல் 162 இடங்கள் கிடைக்கும் என்கிறது இந்த சர்வே
மேற்கு வங்கம், தமிழகம், கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரி மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஏபிபி சிவோட்டர் கருத்து கணிப்புகளின் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக கூட்டணி; கேரளாவில் இடதுசாரிகள் முன்னணி; அஸ்ஸாமில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்கிறது இக்கருத்து கணிப்புகள்.
அஸ்ஸாம்: ஆட்சியை தக்க வைக்கும் பாஜக 73 முதல் 81 இடங்கள்; காங்.36- 44 இடங்கள்; ஏபிபி- சிவோட்டர் சர்வே
மேற்கு வங்க சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பு முடிவுகள்:
- மமதாவின் திரிணாமுல் காங்கிரஸ் 154- 162 இடங்கள்
- பாஜக 98-106 இடங்கள்
- காங்-இடதுசாரிகள் 26- 34 இடங்கள் கிடைக்கும்
- இதர கட்சிகள் 2 முதல் 6 இடங்கள்