For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யாருக்கு வாக்களித்தனர்?.. வித்தியாசமான முறையில் வாக்காளர்களை வேவு பார்த்த திரிணமூல் காங்கிரஸ்!

Google Oneindia Tamil News

கொல்கத்தா: வாக்குப் பதிவு இயந்திரத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சின்னம் இருக்கும் பட்டன் மீது வாசனை திரவியத்தை தெளித்து வாக்காளர்கள் தங்களுக்குத்தான் வாக்களித்தனரா என்பதை அவர்களது விரல்களை நுகர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லோக்சபா தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்குப் பதிவு நாடு முழுவதும் 9 மாநிலங்களில் நேற்று நடைபெற்றது. அது போல் மேற்கு வங்கத்தில் உள்ள சில தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது.

கோமதிக்கு ரூ.15 லட்சம்.. ஆரோக்கியராஜூவுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி... அதிமுக அறிவிப்பு கோமதிக்கு ரூ.15 லட்சம்.. ஆரோக்கியராஜூவுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி... அதிமுக அறிவிப்பு

மாநில பத்திரிகை

மாநில பத்திரிகை

வாக்காளர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கின்றனரா என்பதை தெரிந்து கொள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி புதிய யுத்தியை கையாண்டுள்ளது குறித்து அம்மாநில பத்திரிகை அனந்தபசார் செய்தி வெளியிட்டுள்ளது.

விரலில் வாசனை

விரலில் வாசனை

அந்த பத்திரிகையில் உள்ள செய்தி கூறுகையில், வாக்கு இயந்திரத்திலுள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் வாசனைத் திரவியத்தை கட்சியினர் தெளித்து வைத்திருந்தனர். வாக்களித்துவிட்டு வெளியே வரும் வாக்காளர்களின் விரலை நுகர்ந்து விரலில் வாசனை வருகிறதா என சோதனை செய்தனர்.

புறக்கணிப்பு

புறக்கணிப்பு

இதன் மூலம் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்ததை உறுதி செய்தனர் என செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ஷிஷிர் பஜோரா கூறுகையில் மக்களால் புறக்கணிக்கப்படுவோம் என முன்கூட்டியே அறிந்த திரிணமூல் காங்கிரஸ் போன்ற கட்சியினர் இது போல் எந்த எல்லைக்கும் செல்வர் என்றார்.

முன்னரே நடந்ததுதான்

முன்னரே நடந்ததுதான்

இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெயர் வெளியிட விரும்பாத நிர்வாகி கூறுகையில் இது ஒன்றும் எங்களுக்கு புதிதல்ல. ஏற்கெனவே இது போல் வாசனை திரவியம் மூலம் கண்டறிந்துள்ளோம் என்றார். எனினும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

English summary
Voters claimed that the local TMC had sprayed perfume on the EVM button for the party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X