For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கார்க்கில் பனிச்சரிவில் புதையுண்ட தமிழக வீரர் பலி: சொந்த ஊர் கொண்டுவரப்படுகிறது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: காஷ்மீரின் கார்கில் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் புதையுண்ட தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் விஜயகுமார் சடலமாக மீட்கப்பட்டார்.

3 நாள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, 12 அடி ஆழ பனிகட்டியில் புதைத்திருந்த அவரது உடல் நேற்று மீட்கப்பட்டது.

TN Army soldier found dead in Kargil

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கார்கில் பனிச் சிகரம் 17,500 அடி உயரம் கொண்டது. இங்கு இந்திய ராணுவ முகாம் அமைத்து பாதுகாப்பு பணியில் வீரர்களை ஈடுபடுத்தி உள்ளது. கடந்த 17ம் தேதி இப்பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் மாயமாகினர்.

உடனடியாக அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. முதல் நாள் தேடுதல் வேட்டையில், சிப்பாய் சுஜித் பத்திரமாக மீட்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாயமான மற்றொரு வீரரான தமிழகத்தை சேர்ந்த சிப்பாய் விஜயகுமாரை தேடும் பணி 3வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.

மோப்ப நாய், ரேடார், மெட்டல் டிடெக்டர்கள் மூலம் தேடுதல் பணி தீவிரமாக நடந்தது. இதில், 12 அடி ஆழ பனிச்சரிவில் விஜயகுமார் புதைந்த நிலையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விஜயகுமாரின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வல்லராமபுரமாகும். இவருக்கு பெற்றோர் மற்றும் 2 சகோதரிகள் உள்ளனர். விஜயகுமார் கடந்த 2014ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். சென்னையில் ராணுவத்துக்கு ஆள் எடுக்கும் போது அவர் தேர்வு செய்யப்பட்டார். அவருடன் அதே வல்லராமபுரத்தைச் சேர்ந்த வெள்ளதுரை, ரமேஷ், ராஜா, மகேஷ் ஆகியோரும் தேர்ந்து எடுக்கப்பட்டனர். இவர்கள் 5 பேரும் கார்கில் அருகே உள்ள கன்னா சவுக் என்ற இடத்தில் பணியாற்றி வந்தனர்.

சில தினங்களுக்கு முன் விஜயகுமார் தவிர மற்ற 4 பேரும் சொந்த ஊரான வல்லராமபுரத்துக்கு வந்தனர். விஜயகுமார் மட்டும் வரவில்லை. இந்த நிலையில் அவர் பனிச்சரிவில் சிக்கி பலியாகி விட்டார்.

நேற்று முன்தினம் இரவு ராணுவ அதிகாரி ஒருவர், விஜயகுமார் பனிச்சரிவில் சிக்கி இருப்பதாகவும், அவரை மீட்கும் பணி நடந்து வருவதாகவும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார். விஜயகுமாரின் உடல் மீட்கப்பட்ட தகவல் நேற்று மதியம் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது.

விஜயகுமார் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். விஜயகுமாரின் போட்டோவை கட்டிப்பிடித்தவாறு தாயும், தந்தையும் கதறி அழுதது பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.

விஜயகுமாரின் தங்கை ராஜேஸ்வரி சோகம் தாங்காமல் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை உறவினர்கள், அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். விஜயகுமாரின் உடலை அவரது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க ராணுவ அதிகாரிகள் ஏற்பாடு செய்து உள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ செய்தித் தொடர்பாளர், வீரமரணம் அடைந்த விஜயகுமாரின் உடல், கார்கில் சிகரத்தில் இருந்து அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரும் பணிகள் நடந்து வருகின்றன.

அவரது சொந்த ஊரில் முழு ராணுவ மரியாதையுடன், உடல் தகனம் செய்யப்படும் என்றார். பலியான விஜயகுமாரின் குடும்பத்தினருக்கு, வடக்கு மண்டல ராணுவ கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் டி.எஸ்.ஹூடா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். விஜயகுமாரின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் நடைபெற உள்ளது.

கடந்த மாதம், சியாச்சின் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 தமிழக வீரர்கள் உட்பட 10 ராணுவ வீரர்கள் பலியாகினர். அந்த சோகம் மறைவதற்குள் குறிப்பிடத்தக்கது.இதற்கிடையே, காஷ்மீரில் 48 மணி நேரத்துக்கு பனிச்சரிவு அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Army rescue teams on Sunday recovered the body of a soldier named Vijayakumar who, along with another soldier, had gone missing following an avalanche in frontier Kargil district of Jammu and Kashmir earlier this week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X