For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று உள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் தற்போது நிதி ஆயோக் மாநாடு தொடங்கி உள்ளது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டுள்ளார்.

தற்போது டெல்லியில் மாநில முதல்வர்கள் கலந்துகொள்ளும் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் தொடங்கி உள்ளது. இதில் மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் விவாதிக்கப்படும். அதேபோல் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர்களும் இதில் கலந்து கொண்டு உள்ளனர்.

TN CM goes to Delhi to attend NITI Aayog meeting at Delhi

சென்ற முறை இந்த கூட்டத்தை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர்கள் புறக்கணித்தார்கள். அதேபோல் இந்த முறையும் காங்கிரஸ் முதல்வர் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழக முதல்வர் நேற்று இரவே டெல்லி சென்றுவிட்டார்.

டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிசாமி, நேரம் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிதி ஆயோக் கூட்டத்தில், மத்திய அரசின் புதிய செயல் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

நேற்று தமிழக முதல்வர் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்தார். தற்போது பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் மாநாடு தொடங்கி உள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நிதி ஆயோக் மாநாடு நடக்கிறது. விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

English summary
TN CM Edappadi Palanisamy goes to Delhi to attend NITI Aayog meeting at Delhi. NITI Aayog meeting for CMs will be held at today morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X