For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக விவசாயிகளே... சாகும் வரை உண்ணாவிரதம் இருங்க ! - கட்ஜூ யோசனை

தமிழக விவசாயிகள் தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகள், காந்திய வழியில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ ஆலோசனை கூறியுள்ளார்.

விவசாய கடனை முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையிலேயே படுத்துறங்கி, நாளுக்கொரு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

TN farmers Gandhian fast unto death till demands says Markandey Katju

29வதுநாளாக விவசாயிகளின் போராட்டம் நீடித்து வருகிறது. நேற்றைய தினம் விவசாயிகள் நடத்திய நிர்வாண போராட்டம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. பாஜகவினர் கிண்டலடித்து பேசுவதற்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்காக அவ்வப்போது ஆதரவான கருத்துக்களை கூறி ஓய்பு பெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ ஆதரவு தெரிவிப்பது வழக்கம்.
இதேபோல விவசாயிகளின் போராட்டத்திற்கும் மார்கண்டேய கட்ஜூ ஆதரவு தெரிவித்து ட்விட்டரில் கருத்து வெளியிட்டார். அவரது பதிவில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு உணர்வுப்பூர்வமாக ஆதரவு தெரிவிப்பதாக கூறியிருந்தார்.

சாகும் வரை உண்ணாவிரதம்

இந்த நிலையில் இன்று தனது டுவிட்டர் பதிவில், டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு நான் கூறுவது என்னவெனில், காந்தீய வழியில் போராட வேண்டும். சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டும். தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராடினால் மட்டுமே வெற்றி பெற முடியும். தெலுங்கானா கோரி சந்திரசேகர ராவ் இந்த வழியில் போராடியே வெற்றி பெற்றார் என்று கூறியுள்ளார் கட்ஜூ.

English summary
Justice Markandey Katju said his twitter post, Tamilnadu farmers in Delhi announce Gandhian fast unto death till demands accepted. It is an 'amogh astra', KCR got Telangana.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X