For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரியில் கழிவுநீர் கலப்படம்... குடியரசுத்தலைவரிடம் முறையிட்ட விவசாயிகள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: காவிரி பிரச்சினையில் குடியரசு தலைவர் தலையிட்டு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் 22 பேர் அடங்கிய குழு, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளது

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் விவசாயிகள் அளித்துள்ள மனுவில், காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை தராமல், கழிவுநீர் கலப்பட்ட தண்ணீரை, தமிழக பகுதிகளுக்கு கர்நாடகம் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

TN farmers in meet Pranab Mukerjee

காவிரியின் குறுக்கே, மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

கர்நாடகத்தின் இந்த போக்கினை தடுத்து நிறுத்த, வேண்டும் என்றும் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் பிரதிநிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
With the Karnataka reportedly going ahead with its plan to construct dams across Cauvery amid best efforts by Tamilnadu government to halt the proposal, farmers from the State were in New Delhi today, met President Pranab Mukherjee and seek his intervention.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X