For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜிபிஎஸ், யூசர் நேம், பாஸ்வேர்ட்.. புத்தம்புதிய வாடகை சைக்கிள் திட்டம்.. கோவையில் தொடங்கியது

கோவையில் நிறைய தொழில்நுட்பங்களுடன் இயங்கும் வாடகை சைக்கிள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

கோவை: கோவையில் நிறைய தொழில்நுட்பங்களுடன் இயங்கும் வாடகை சைக்கிள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் முக்கிய படியாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது.

நேற்று ஆர்.எஸ் புறத்தில் இதன் தொடக்க விழா நடந்தது. அமைச்சர் வேலுமணி, மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோவையின் போக்குவரத்து நெரிசல் இதன் மூலம் குறையும். அதேபோல் சுற்றுசூழல் மாசும் இதன் மூலம் குறையும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

ஓபோ

ஓபோ

இதற்காக ஓபோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறது. தொடக்கத்தில் 6 ஆயிரம் சைக்கிள்கள் கோவை நகரம் முழுக்க வலம் வர இருக்கிறது. இதில் நிறைய தொழிநுட்பங்கள் இருக்கிறது.

அசத்தல் டெக்னலாஜி

அசத்தல் டெக்னலாஜி

இதற்கு ஓபோ அப்ளிகேஷனை மொபைலில் டவுன்லோன் செய்து, அக்கவுண்ட் ஓபன் செய்ய வேண்டும். பின் சைக்கிளிலை இருக்கும் பார்கோடை ஸ்கேன் செய்ய வேண்டும். அப்போது மட்டுமே இதில் இருக்கும் பூட்டு திறக்கும். இந்த அப்ளிகேஷன் பிளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும்.

ஜிபிஎஸ் இருக்கிறது

ஜிபிஎஸ் இருக்கிறது

இதில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் நாம் வாகனத்தை எங்கெல்லாம்எடுத்து செல்கிறோம் என்று கண்டுபிடிக்க முடியும். எங்கு மறைத்து வைத்து இருந்தாலும் கண்டுபிடிக்க முடியும்.

கட்டணம்

கட்டணம்

முதல் மூன்று வாரம் மட்டும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதன்பின் இதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் மிகவும் குறைவாகவே இருக்கும். கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலம் கட்டணம் செலுத்தலாம்.

English summary
Tn govt launches Sharing Bicycle Service in Coimbatore. We can use by cycle for few period with a user name and password. We have to pay the usage after 3rd week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X