For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு: வேறு மாநிலத்திற்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதியிடம் மனு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

TN lawyers seek the SC to move the judgement of Jaya DA case from Karnataka
டெல்லி: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு மாநிலத்தில் அளிக்க உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதாவிடம் தமிழகத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் என். ராஜாராமன், ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில், "தமிழக முதல்வர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வரும் 27-ஆம் தேதி அளிக்கப்படவுள்ளது. இந்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான தீர்ப்பு பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரம் சிறை வளாக நீதிமன்றத்தில் அளிக்கப்பட உள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபரான ஜெயலலிதா, தமிழக முதல்வராக உள்ளார். அவரது உயிருக்கு ஏற்கெனவே அச்சுறுத்தல் உள்ளது. இதனால், அவருக்கு "இசட் பிளஸ்' பிரிவின்கீழ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், காவிரி நதி நீர்ப் பிரச்னையில் அவரது முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளதால் அவர் மீது கர்நாடக மாநில மக்கள் மத்தியில் அதிருப்தியும், வெறுப்பும் உள்ளது.

பரப்பன அக்ரஹார சிறை வளாகங்களில் நீதிமன்ற வளாகத்தில் போதுமான பாதுகாப்பு வசதிகள் கிடையாது. இந்த நிலையில், தமிழகத்தில் இருந்து பெரும்பான்மை அதிமுகவினரும் தீர்ப்பு வெளியாகும் நாளில் பெங்களூருவில் குழுமுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை ராணுவத்தாலும் அச்சுறுத்தல் உள்ளது. எனவே, முதல்வர் ஜெயலலிதாவின் விலைமதிக்க முடியாத உயிர் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த வழக்கின் தீர்ப்பை கர்நாடகம் தவிர்த்த வேறு பிற மாநிலங்களில் அளிக்க உத்தரவிட பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதை பெற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா, மனுவை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் ரவீந்திரா மைதானிக்குப் பரிந்துரை செய்ததாகத் தெரிகிறது.

English summary
Two lawyers from the TN have urged the SC to move the pronouncement of the judgement of Jaya's DA case from Karnataka to some other state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X