For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசிகலா பரோல்- கர்நாடக சிறைத்துறைக்கு தமிழக காவல்துறை பதில்

சசிகலாவிற்கு பரோல் வழங்குவது தொடர்பாக கர்நாடகா சிறைத்துறைக்கு தமிழக அரசு பதில் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    சசிகலா பரோல் கர்நாடக சிறைத்துறைக்கு தமிழக காவல்துறை பதில்-வீடியோ

    சென்னை: சசிகலாவிற்கு பரோல் வழங்கும் விவகாரத்தில் கர்நாடக சிறைத்துறைக்கு தமிழக காவல்துறை பதில் அனுப்பியுள்ளது.

    சென்னை மாநகர காவல் ஆணையரிடமிருந்து தடையில்லா சான்றிதழ் வழங்காததால் சசிகலாவுக்கு பரோல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

    சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா, அவரது உறவினர்கள், இளவரசி, சுதாகரன் ஆகியோர், பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    பரோல் கேட்ட சசிகலா

    பரோல் கேட்ட சசிகலா

    சசிகலாவின் கணவர், நடராஜன், உடல்நலக் குறைவு காரணமாக, சென்னையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு இரு தினங்களுக்கு முன் உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அவரை பார்க்க, பரோல் கேட்டு சிறை அதிகாரிகளிடம் சசிகலா விண்ணப்பித்தார்.

    சசி மனு நிராகரிப்பு

    சசி மனு நிராகரிப்பு

    முறையான ஆவணங்கள் இல்லை' என, அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இரண்டாவது முறையாக, உரிய ஆவணங்களுடன் மனு செய்தார். அதைத் தொடர்ந்து, கர்நாடக சிறை துறையினர், தமிழக காவல் துறையினரிடம், 'பரோல் வழங்குவதில் ஆட்சேபனை உள்ளதா என, கேட்டனர்.

    தடையில்லா சான்றிதழ்

    தடையில்லா சான்றிதழ்

    இதற்கு இன்னும் சென்னை காவல்துறையினரிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை என்று பெங்களூரு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகர காவல் ஆணையரிடமிருந்து தடையில்லா சான்றிதழ் வழங்காததால் சசிகலாவுக்கு பரோல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

    பரோல் மனு பரிசீலனை

    பரோல் மனு பரிசீலனை

    சசிகலா பரோல் மனுவானது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சென்னையில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு, பெங்களூரில் இருக்கக்கூடிய சிறைத்துறை அதிகாரிகள் மின் அஞ்சலை அனுப்பியிருந்தனர். தமிழக காவல்துறையின் பதிலுக்காக காத்திருந்தனர்.

    பதில் அனுப்பிய தமிழக காவல்துறை

    பதில் அனுப்பிய தமிழக காவல்துறை

    இதனால் சசிகலாவுக்கு பரோல் கிடைப்பது தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தமிழக காவல்துறையிடம் இருந்து கர்நாடக சிறைத்துறைக்கு இன்று பதில் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சசி எங்கு தங்குவார்

    சசி எங்கு தங்குவார்

    சசிகலாவிற்கு இன்று பரோல் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பரோலில் வெளியே வரும் சசிகலா, எங்கு தங்குவார் என்று கேள்வி எழுந்தது. அவர் சிறுதாவூர் பங்களா, இளவரசி மகள் கிருஷ்ணபிரியாவின் வீட்டில் தங்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    English summary
    Tamil Nadu police replied to Karnataka prison. Parole process to start by 10 am in Karnataka Prison dept.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X