For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லி வருகிறது இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் குழு

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் குழு வரும் நாளை டெல்லி வருகை தர உள்ளது.

மோடி தனது பதவி ஏற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்திருந்தார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அதன் பின்னரும் இலங்கை பிரச்சனையில் முந்தைய காங்கிரஸ் அரசின் நிலையையே மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழு நாளை டெல்லி வருகிறது.

இக் குழுவில் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், பொன்.செல்வராசா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். டெல்லியில் 2 நாட்கள் தங்கியிருக்கும் இக்குழுவினர் முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து பேசுகின்றனர்.

இது தொடர்பாக கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய சுமந்திரன் எம்.பி, 13வது அரசியல் சாசன திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்ட இந்திய மத்திய அரசை வலியுறுத்த இருக்கிறோம் என்றார்.

English summary
The Tamil National Alliance (TNA) says it will urge Indian Prime Minister Narendra Modi and External Affairs Minister (EAM) Sushma Swaraj to push for the full implementation of the 13th Amendment to the constitution. TNA Parliamentarian M.A. Sumanthiran said that the party will look to several key issues with the Indian Government, including the 13th Amendment to the constitution, during a visit to New Delhi beginning tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X