For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காதலிக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத காதலன்.. விமானக் கடத்தல் மிரட்டல் விடுத்து கைது

சென்னையைச் சேர்ந்த தனது காதலியை விமானத்தில் அழைத்துச் செல்ல பணம் இல்லாததால் விமானம் கடத்தப்படும் என்று வதந்தியை பரப்பிய டிராவல் ஏஜெண்ட் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தன்னுடைய பேஸ்புக் காதலிக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததால் விமானத்தை கடத்த நூதன முறையைக் கையாண்ட டிராவல் ஏஜெண்ட் கைது செய்யப்பட்டார்.

ஹைதரபாத்தைச் சேர்ந்த வம்சி கிருஷ்ணன் என்பவர், போக்குவரத்து துறை குறித்த தொழில்களை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர், வம்சி கிருஷ்ணனுக்கு பேஸ்புக் மூலம் இளம்பெண் ஒருவர் பழக்கமாகியுள்ளார். நாளடைவில் இந்த பழக்கம் நெருக்கமாகியுள்ளது.

To stall girlfriend from going to Goa, man sends hoax hijack email

ஹைதரபாத்தைச் சேர்ந்தவர் வம்சி கிருஷ்ணன் என்பவர் டிராவல் ஏஜெண்டாக உள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், வம்சி கிருஷ்ணனுக்கு பேஸ்புக் மூலம் சென்னைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பழக்கமாகியுள்ளார். நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் தான் மும்பை மற்றும் கோவாவுக்கு சுற்றுலா செல்ல விரும்புவதாகவும், எனவே தனக்கு மும்பைக்கு செல்ல விமான டிக்கெட் எடுத்துத் தரும்படி அந்த இளம்பெண் வம்சியிடம் தெரிவித்துள்ளார். மேலும் இருவரும் மும்பை விமான நிலையத்தில் சந்திக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் வம்சியிடம் விமான டிக்கெட் புக் செய்யும் அளவுக்கு பணம் இல்லை. எனவே ஏப்ரல் 15-ஆம் தேதியிட்ட சென்னையிலிருந்து மும்பைக்கு செல்லக் கூடியது போல , போலி விமான டிக்கெட்டை தயார் செய்து, அதனை அந்த இளம்பெண்ணுக்கு மின்னஞ்சல் செய்துள்ளார் வம்சி.

மேலும் தன்னுடைய காதலியை விமான பயணம் மேற்கொள்ளாமல் இருப்பதை தடுப்பதற்காக பயண நாளுக்கு முதல் நாள் எஸ்.ஆர்.நகர் இணையதள மையத்திற்குச் சென்று போலி இணையதள ஐடி உருவாக்கி விமானக் கடத்தல் மிரட்டல் மின்னஞ்சலை மும்பை போலீஸ் கமிஷனருக்கு அனுப்பியுள்ளார்.

பெண் பெயரில் அனுப்பப்பட்ட அந்த மின்னஞ்சலில் மும்பை, ஹைதராபாத், சென்னை விமான நிலையங்களில் 6 பேர் விமானக் கடத்தலில் ஈடுபடப்போவதாகவும், தான் கேட்ட இந்த உரையாடல் உண்மையா பொய்யா என்று தனக்குத் தெரியாது, ஆனால் போலீஸுக்குத் தெரிவிப்பது கடமை என்று குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

தங்களுக்கு வந்த மிரட்டல் மின்னஞ்சலை ஆராய்ந்த காவல்துறையினர் அது போலியானது என்பதை கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து போலி மிரட்டல் விடுத்த வம்சி கிருஷ்ணாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

English summary
The man now in the custody of the Hyderabad police said that he wanted to stall his girlfriend's trip to Goa and hence he sent out the hoax mail to the Mumbai police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X