For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இவ்வளவு கஷ்டப்பட்டிருக்காரே அமித் ஷா.. அவ்வளவு சீக்கிரம் விட்டுக் கொடுத்துருவாரா?

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜவுக்காக அமித் ஷா வைத்திருக்கும் 3 அஸ்திரங்கள்!- வீடியோ

    பெங்களூரு: கர்நாடகத்தில் பாஜகவின் வெற்றிக்காக கிட்டத்தட்ட 34 நாட்கள் மிகத் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் பாஜக தலைவர் அமித் ஷா. எனவே அத்தனை சீக்கிரமாக அதிகாரத்தைப் பிடிக்கும் முயற்சிகளை பாஜக விட்டுக் கொடுத்து விடாது.

    கர்நாடகத்தில் வெல்வது என்பது பாஜகவுக்கு மிக முக்கியமானது. காரணம் இங்கு உட்கார்ந்து விட்டால் படிப்படியாக தென் மாநிலங்களில் காவியை பரப்ப முடியும் என்பது அதன் திட்டம்.

    அதைக் கருத்தில் கொண்டுதான் பாஜக தலைவர் அமித் ஷா கர்நாடக சட்டசபைத் தேர்தலில் மிகத் தீவிரமாக பிரசாரம் செய்தார். எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு அமைய அமித் ஷா போட்ட திட்டங்கள் மிகப் பெரியவை.

    59 கூட்டங்கள்

    59 கூட்டங்கள்

    இதுவரை இல்லாத அளவுக்கு தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார் அமித் ஷா. 28 மாவட்டங்களில் 59 பொதுக் கூட்டங்களில் அவர் பேசினார்.

    57,135 கிமீ.

    57,135 கிமீ.

    34 நாட்கள் தங்கிப் பிரசாரம் செய்த அவர் மொத்தம் 57 ஆயிரத்து 135 கிலோமீட்டர் தொலைவுக்குப் பயணம் செய்துள்ளார். பல்வேறு மடாதிபதிகளைச் சந்தித்து ஜாதி வாக்குகளுக்குத் துண்டு போட்டார்.

    உ.பி சரிவிலிருந்து தூக்கி நிறுத்த

    உ.பி சரிவிலிருந்து தூக்கி நிறுத்த

    உபி இடைத் தேர்தலில் பாஜக படு தோல்வி அடைந்ததால் அதிலிருந்து கட்சியின் உத்வேகத்தை தூக்கி நிறுத்த கர்நாடக வெற்றி பாஜகவுக்குத் தேவைப்பட்டது. எனவேதான் கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிப்பதை பாஜக தீவிரமாக எடுத்துக் கொண்டது.

    வீடு வீடாக

    வீடு வீடாக

    கர்நாடக பிரசாரத்தில் ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டு ஈடுபட்டார் அமித் ஷா. ஊர் ஊராக, ரோடு ரோடாக, வீடு வீடாக பாஜகவினர் ரீச் ஆகும் வகையில் அவரது பிரசாரங்கள் திட்டமிடப்பட்டிருந்தது.

    நேரடி மேற்பார்வை

    நேரடி மேற்பார்வை

    கர்நாடக பிரசார திட்டம் முழுவதும் அமித் ஷாவின் நேரடி பார்வையிலேயே நடந்தது. தேர்தல் அறிக்கையைக் கூட அவர்தான் இறுதி செய்தார். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு தேர்தல் அறிக்கையையும் பாஜக வெளியிட்டது.

    இத்தனை செய்துள்ள பாஜக.. அத்தனை சீக்கிரமாக அதிகாரத்தை விட்டுக் கொடுத்து விடுமா என்ன.. !

    English summary
    Amit Shah the president of the BJP wanted to leave nothing to chance. A win in Karnataka was extremely important as the party considers it as a gateway to the South. The campaign which was led by B S Yeddyurappa in Karnataka who is set to take oath of the chief minister was backed by Amit Shah to the hilt.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X